விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மூன்று முப்பதுஆறினோடு*  ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய்,* 
    மூன்று மூர்த்தி ஆகிமூன்று*  மூன்றுமூன்று மூன்றுமாய்*,
    தோன்றுசோதி மூன்றுமாய்*  துளக்கம்இல் விளக்கமாய்*, 
    ஏன்றுஎன் ஆவியுள்புகுந்தது*  என்கொலோ? எம் ஈசனே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மூன்று முப்பது - முப்பத்து மூன்று ஹல்லெழுத்துகட்கும்
ஆறினொரு ஒரு ஐந்தும் ஐந்தும் - பதினாறு அச்செழுத்துகட்கும்
ஐந்து - ளகாராதி பஞ்சாக்ஷரங்கட்கும்
ஆய் - நிர்வாஹகனாய்
மூன்று மூர்த்தி ஆகி - ருக்கு, யஜுஸ், ஸரமம் னஎ“கிற வேதத்ரய ஸ்வரூபியாய்

விளக்க உரை

வேதங்களையும் மந்த்ர ரஹஸ்யங்களையும் தேவரீர் உண்டாக்கி வைத்திருக்கச் செய்தேயும் அடியேன் அவ்வழியாலே அறிந்து உபாஸியாதே யிருக்க தேவரீரே அடியேனுயைட ஹ்ருதயத்தினுள்ளே புகுந்தெழுந்தருளியிருக்கிறவிது என்ன நீர்மை! என்று ஈடுபட்டுப் பேசும் பாசுரம், இது. மூன்று மூர்த்தியாகி = ருக்கு, ஸாமம், யஜுஸ் என்று மூன்று உருக்கொண்ட வேதங்களுக்கு ப்ரதிபாத்யன் (அல்லது) ப்ரவர்த்தகன் என்றபடி, மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் = நாலுமூன்றுகள் கூடியப் பன்னிரண்டாய், “ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’ என்கிற தவ்யாதசாக்ஷரியாலே ப்ரதிபாத்யன் என்றதாகிறது. தோன்று சோதி மூன்றுமாய் = ‘மூன்று தோன்று சோதியாய்’ என்று மொழிமாற்றி இயைக்கவேணும். மூன்றிலே தோன்றுகிற சோதியாய் என்றபடி. மூன்று என்கிறது- மூன்று திருவக்ஷரமான ப்ரணவத்தை. இது ஸம்ஹிதாகாரத்தாலே ஏகாக்ஷரமாயிருந்தாலும் உட்பிரிவிலே அ, உ, ம் என மூன்று திருவக்ஷரமாய் மூன்று அர்த்தங்களைப் பிரதிபாதிக்கவற்றாயிருக்குமிறே. இப்படிப்பட்ட ஓங்காரத்திலே திகழ்கின்ற ஜ்யோதிர்மயன் எம்பெருமானிறே. “ஓங்காரோ பகவாந் விஷ்ணு.” என்றதும் காண்க. துளக்கமில் விளக்கமாய் = அந்த ப்ரணவத்திலே ப்ரதமாக்ஷரமான அகாரத்தைத் “துளக்கமில்விளக்” கெள்கிறது. ஸகல வேதங்கட்குக் காரணமான ப்ரணவத்துக்குங் காரணமாய், தனக்கொரு காரணமற்றிறே அகாரமிருப்பது. ஆகையாய் துளக்கமற்ற விளக்குப் போன்றதாய்த்து. ஆக இவ்வழியாலே நான் அறிந்து உபாஸிப்பதற்கு நீ விஷயமாக வேண்டியிருக்க, அங்ஙனாகாதே நீயே எனது அஜ்ஞாக அசக்திகளைக் கண்டறிந்து இப்படிப்பட்ட உன் ஸ்வரூபத்தை எனக்கு ஸாக்ஷாத்கரிப்பித்து என்னை இடைவிடாது அடிமைகொண்டனையே! என்கிற உருக்கம் ஈற்றடியில் தோற்றும்.

English Translation

The three and thirty consonants, the five and six and five vowels, the five diphthongs and twelve letters of Rig, Yajur and Saman, O! The three-syllable AUM that shines a spotless, source of all the light. The way it mixes in my soul and makes me sing thy glory, Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்