விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*  திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை* 
    எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று*  அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா* 
     
    கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்*  கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த* 
    நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திறல் விளங்கும் - பல பராக்கிரமம் விளங்கப் பெற்ற;
மாருதியோடு - அனுமானுடனே;
வல்லார் - கற்று வல்லவர்கள்;
நலம் திகழ - பரமபதத்தில் விளங்குகிற;
நாரணன் - ஸ்ரீமந்த நாராயணனுடைய;
அடிகீழ் நண்ணுவார் - திருவடிகளிற் சேரப் பெறுவார்கள்.;

 

விளக்க உரை

தில்லைத் திருச்சித்ரக்கூடத் தெம்பெருமான் விஷயமாக ஸ்ரீகுலசேகராழ்வார் அருளிச்செய்த பரமபோக்யமான இத்திருமொழியை ஒதவல்லவர்கள் எம்பெருமானருளாற் பரமபதமடைவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டினராயிற்று. ஸ்ரீராமகதை உலகத்திலுள்ளவளவும் தாம் ஜீவித்திருக்குமாறு ஸ்ரீராமனிடம் வரம்வேண்டிப் பெற்றவருமான திருவடி, இராமபிரான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளிய பொழுது அவனைவிட்டு பிரியமாட்டாது மனமிரங்க அந்த உத்தம பக்த சிகாமணியை தானும் விடமாட்டாமல் ஸ்ரீராமன் அவருடனே சித்ரகூடத்தில் வந்து வீற்றிருக்கின்றனனாம்.

English Translation

This decad of sweet Tamil songs by well-armed well-protected Kulasekara, Commander and King of Uraiyur, set in the good style of Sopanam, sings of the Lord who resides in Tillainagar Tiruchitrakutam with his strong aide Maruti, beginning with his Avatar as Dasaratha’s son until his return to the glorious abode. Those who master it will attain the blessed feet of Narayana.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்