விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்*  சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும்*  அரையிற்- 
    தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்*  பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்* 
    மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்*  மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக* 
    எங்கள் குடிக்கு அரசே! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எங்கள் குடிக்கு - எங்கள் வம்சத்துக்கு
அரசே - ராஜாவானவனே!
செம் கமலம் - செந்தாமரைப் பூப்போன்ற
கழலில் - திருவடிகளில்
சிறு இதழ்போல் - (அந்தப் பூவினுடைய) உள்ளிதழ்போலே சிறுத்திருக்கிற
 

விளக்க உரை

உரை:1

கண்ணபிரான் திருமேனியிலணிந்துள்ள திவ்யாபரணங்களை வாயாரப் பேசி அனுபவிக்கிறார். செங்கீரையாடும்போது ஆபரணங்கள் எல்லாம் அசையுமாதலால் இவ்வாறு அருளிச்செய்தனர். செந்தாமரைப்பூவில் சிறிய இதழ்கள் தோன்றுவதுபோல் திருவடிகளில் சிறுவிரல்கள் தோன்றுகின்றன என்பது செங்கமலக்கழலில் சிற்றிதழ் போல் விரலில் என்றதன் கருத்து. கிண்கிணி - அரைச்சதங்கையுமாகலாம் பாதச் சலங்கையுமாகலாம்.

உரை:2

மழலைச் செல்வன் மாதவனின் மென்மையான செந்தாமரைப் போல் சிவந்த பாதங்களில் ஒலிக்கின்ற கிண்கிணிகளும், அச்சிறு பாதத்திலிருந்து, சிறு மொட்டுகள் அரும்பி இருப்பது போல் அமைந்திருக்கின்ற விரல்களில் அணிந்துள்ள மோதிரங்களும் உன் சிற்றிடையில் அணிவிக்கப்பட்டுள்ள, பொன்னாலான அரைஞாண்கயிற்றில் பூட்டப்பட்டுள்ள நல்ல மாதுளம்பூவுடன், பொன்மணிகளும் சேர்ந்து இசைக்க கைவிரல்களில் அணிந்துள்ள மோதிரம் ஒளி வீச, கைகளில் அணிந்துள்ள பவள வளையல் பளபளக்க, மார்பில் உள்ள மங்கல ஐம்படையும் சேர்ந்தாட, உன் தோளில் உள்ள தோள்வளையுடன் காதில் அணிந்துள்ள மகரகுண்டலமும், வாளியும்(ஒரு வகைக் காதணி), உச்சியில் சுட்டியும் உன் திருமேனி வண்ணத்திற்கு எடுப்பாய் அமைந்து உன்னுடன் சேர்ந்தாடும் வண்ணம் எங்கள் ஆயர்குடி ஆதவனே செங்கீரை ஆடுவாயாக! ஏழுலகும் ஆள்பவனே செங்கீரை ஆடுக ஆடுகவே!

 

English Translation

Wearing a matched set of rings on toes that look like petals on feet of lotuses; bells befitting the ankles; a golden waist-tread with pears and beads alternating; rings on fingers and a bracelet for the wrist; a necklace of charms shaped like the five weapons; shoulder rings, Makara-shaped ear pendants and a forehead-jewel, O, King and Master, dance! Dance the Senkirai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்