விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தண் அந் தாமரைக் கண்ணனே கண்ணா*  தவழ்ந்து தளர்ந்ததோர் நடையால் 
    மண்ணிற் செம்பொடி ஆடி வந்து*  என்தன்- மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ* 
    வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும்*  வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்* 
    உண்ணப் பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்*  என்னை என் செய்யப் பெற்றது எம் மோயே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தண் அம் தாமரை கண்ணனனே - குளிர்ந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனே;
கண்ணா தவழ்ந்து எழுந்து - கண்ணபிரானே (நீ) தவழ்ந்து கொண்டுஎழுந்திருந்து;
தளர்ந்தது ஓர் நடையால் - தட்டுத்தடுமாறி நடப்பதாகிற ஒரு நடையினால்;
செம்மண் பொடியில் - சிவந்த புழதி மண்ணிலே;
ஆடி வந்து - விளையாடி (அக்கோலத்தோடே) வந்து;

விளக்க உரை

குளிர்ந்து அழகிய தாமரைப்பூப்போலே அலர்ந்த திருக்கண்களையுடைய கண்ணபிரானே! நீ செம்மண்ணிலே புழுதியளைந்து விளையாடும்போது தவழ்ந்து செல்வதனாலும் தட்டுத்தடுமாறித் தரையில் காலூன்றியு மூன்றாதும் நடப்பதனாலும் புழுதி மண்ணை அளைந்த அக்கோலத்தோடே வந்து என் மார்விலே கட்டிக் கொண்டு கிடக்கப்பெற்றிலேனே!; எல்லாத் திருவிரல்களாலும் ப்ரஸாதத்தை வாரி அமுது செய்யும் பொது வாயது கையதாக மிகுந்த ப்ராஸதத்ரையு முண்ணப் பெற்றினலேனே!; ஆட்டின் கழுத்தில் முலை (அதர்) போலே என்னை என் தாய் வீணாகவேயன்றோ பெற்றாளென்கிறாள். “ செம்மண் பொடியில் தவழ்ந்து ஆடி, எழுந்து தளர்ந்ததோர் நடையால் வந்து என்றன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன்” என்று அந்வயித்துப்பொருள் கொள்ளுதல் சாலச்சிறக்கும் இப்பாட்டின் முன்னடிகட்கு “ மக்கண் மெய்தீண்டலுடற்கின்பம் “ என்னுங் குறளையும் பின்னடிகட்கு “அமிழ்தினு மாற்ற வினிதே தம் மக்கள் சிறுகை யளாவிய கூழ்” என்னுங் குறளையும் நினைக்க.

English Translation

O Krishna, with eyes like the petals of a lotus! Alas, I have not enjoyed seeing you play in the mud, then come crawling and toddling to embrace my bosom with red dust all over you, nor of eating the remains of sweet-rice savored by you with all your pink fingers. O the terrible sinner that I am, for what did my mother beget me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்