விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு*  வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே* 
    பொன்னொத்த ஆடை குக்கூடலிட்டுப்*  போகின்ற போது நான் கண்டு நின்றேன்*
    கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக்*  கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்*
    என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய்?*  இன்னம் அங்கே நட நம்பி நீயே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு - மின்னல் போன்று ஸூக்ஷ்மமான இடையையுடைய ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டு;
வீங்கு இருள்வாய் - நிபிடமான (மிக்க) இருள் வேளையிலே;
பொன் ஒத்த ஆடை - பீதாம்பரத்தாலே;
குக்கூடல் இட்டு - முட்டாக்கிட்டுக் கொண்டு;
என்தன் வீதி ஊடே - என் வீதி வழியே;

விளக்க உரை

வேறொருத்தியின் பாசுரம் இது. நள்ளிருளில் ஒருவர்க்குந் தெரியாமல் போக வேணுமென்று போகிறவன் இருளன்னமாமேனியைத் திறந்து கொண்டே போகலாம்; அல்லது கறுத்ததோர் ஆடையைப் போர்த்துக் கொண்டு போகலாம். நீயோ இருளை அகற்றிப் பளபளவென்று ப்ராகாசிக்கும் படியான பீதாம்பரத்தை முட்டாக்கிட்டுக் கொண்டு போனாய்; போவதுதானும் வேறு வழியாயோ! நான் கண்டு வயிறெரிய வேணுமென்றே என் தெருவழியே போனாய், என்ற கருத்துக்களை விரித்துக் கொள்க ( குக்கூடல் - முட்டாக்கு )

English Translation

I saw you go as you made through the street in the cover of darkness with your arm over the shoulders of a thin-waisted dame, both covered over head with your yellow upper-cloth. Seeing another dame, you spoke to her with your eyes and made signs with your hand. I saw that also. Now, you leave her too and come here. What for? Continue going that way, O Complete Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்