விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி*  திகழ் திருச்சக்கரத்தின்*
    கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று*   குடிகுடி ஆட்செய்கின்றோம்*
    மாயப் பொருபடை வாணனை*  ஆயிரந் தோளும் பொழி குருதி 
    பாயச்*  சுழற்றிய ஆழி வல்லானுக்குப்*   பல்லாண்டு கூறுதுமே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீயின் - (சந்திரன்: ஸூர்யன் அக்நி முதலிய) சுடர்ப்பொருள்கள் எல்லாவற்றையும்விட;
பொலிகின்ற - பிரபலமாகப் பிரகாசிப்பதும்;
செம் சுடர் திகழ் - சிவந்த ஒளியோடுகூடி விளங்குவதுமான;
திருசக்கரத்தின் - திருவாழியாழ்வான் எழுந்தருளியிருக்கிற;
கோயில் - ஸ்தானமாகிய;

விளக்க உரை

ஏடு நிலத்தில் என்ற பாசுரத்தில் கைவல்யார்த்திகளை அழைத்து, நாடு நகரமும் நன்கு அறிய நீங்கள் வர வேணும் என்று தெரிவித்தாரன்றோ. அவர்களும் அப்படியே வர திருவுள்ளம் கொண்டவர்களாய், பஞ்ச சம்ஸ்காரம் பண்ணிக்கொண்டு, எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுபவர்களாய் ஆகிவிட்டோம் என்று எல்லோரும் அறியும் படி சொல்லிக்கொண்டு வந்த பாசுரம் இப்பாசுரமாகும். சந்திர சூர்யர்களைக் காட்டிலும் மிகவும் பிரகாசமாக இருப்பவனும், சிவந்த ஒளியோடு கூடி விளங்குபவனுமான ஸ்ரீ சக்கரத்தாழ்வானின் வட்ட வடிவத்தினால் அடையாளம் செய்யப் பட்டவர்களாய், பல காலமாக எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து வருகிறோம். பாணாசுரனுடைய ஆயிரம் தோள்களிலிருந்தும் இரத்தம் வெள்ளமாகப் பாய்ந்தோடும் படி செய்த ஸ்ரீ சக்ராயுதத்தை ஆளவல்ல எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்வோம்.

English Translation

Branded with a shape of the radiant discus blazine with the brilliance of fire we stands and serve, generation after generation. For him who swirled the discus over Bana – who was waging a war of illusion,-and made his thousand shoulders bleed, we sing Pallandu.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்