விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நடம் ஆடித் தோகை விரிக்கின்ற*  மா மயில்காள்*  
    உம்மை நடம் ஆட்டம் காணப்*  பாவியேன் நான் ஓர் முதல் இலேன்* 
    குடம் ஆடு கூத்தன்*  கோவிந்தன் கோமிறை செய்து* 
    எம்மை  உடை மாடு கொண்டான்*  உங்களுக்கு இனி ஒன்று போதுமே?*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நடம் ஆடி - கூத்தாடிக்கொண்டு
தோகை விரிக்கின்ற - தோகைகளை விரிக்கிற
மா மயில்காள் - சிறந்தமயில்களே!
உம்மை - உங்களுடைய
நடம் ஆட்டம் காண - கூத்தைப் பார்ப்பதற்கு

விளக்க உரை

‘உங்கள் கூத்தைநிறுத்துங்கள்‘ என்று மயில்களின் காலிலே இவள் விழுந்து வேண்டிக்கொள்ளவே, அம்மயில்கள் இவளுடைய எளிமையை நன்று தெரிந்து கொண்டு ‘இவளுக்கு நாம் அநிஷ்டமானதைச் செய்தால் நம்மை இவள் தண்டிப்பளோவென்று நாம் அஞ்சவேண்டா; இவள் புகலற்றுக்கிடக்கின்றான்; இவளை நாம் எப்படி ஹிம்ஸித்தாலும் கேட்பாரில்லை என்று எண்ணி முன்னிலும் அதிகமாகத் தோகைகளை விரித்துக் கூத்தாடத்தொடங்கின; அவற்றை நோக்கி மீண்டும் தன் அவஸ்தையை முறையிட்டுக்கொள்கிறாள். நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள் - தோகைவிரித்து நடமாடுகின்ற மாமயில்காள்! என்க. உள்ளபழயே அந்வயிப்பதும் ஒக்கும். (உம்மை இத்யாதி) கண்ணுடையவர்கள் உங்கள் கூத்தைக் கண்டால் பரமாநந்தம் பெறுவர்கள் என்பதில் தட்டில்லை; கண் இழந்திருக்கிற நான் உங்கள் கூத்தை எங்ஙனே காணவல்லேன்? முதல் இலேன் என்றது - காண்பதற்கு முக்யஸாதநமான கண்ணையுடையேனல்லேன் என்றபடி. “என்ஐம்புலனும் எழிலுங்கொண்டு“ என்றபடி எல்லா இந்திரியங்களையுங் கொள்ளை கொண்டானிறே எம்பெருமான்.

English Translation

O Good Peacocks spreading your feathers in preparation for another dance! This sinner self has nothing to give you for your performance. The pot-dancer Govinda has plundered my all, and left me a pauper. Now is it proper for you to dance?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்