விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வான் கொண்டு கிளர்ந்து எழுந்த*  மா முகில்காள்!*  வேங்கடத்துத்- 
    தேன் கொண்ட மலர் சிதறத்*  திரண்டு ஏறிப் பொழிவீர்காள்* 
    ஊன் கொண்ட வள் உகிரால்*  இரணியனை உடல் இடந்தான்* 
    தான் கொண்ட சரிவளைகள்*  தருமாகிற் சாற்றுமினே*   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேங்கடத்து - திருமலையிலே
தேன் கொண்ட மலர் சிதற - தேன் நிறைந்துள்ள புஷ்பங்கள் சிதறும்படி
திரண்டு ஏறி பொழிலீர்காள் - திரள் திரளாக ஆகாயத்திலேறி மழையைப் பொழிகின்றவையாயும்
வான்கொண்டு கிளர்ந்து எழுந்த - ஆகாயத்தைக் கபளீகரித்துக்கொண்டு ஒங்கிக் கிளம்புகின்றவையாயுமுள்ள
மா முகில்காள்! - காளமேகங்களை!

விளக்க உரை

முன்னடிகளிரண்டும் மேகவிளி. ஆகாசத்தை விளாக்குலைகொண்டு - எங்குப்பார்த்தாலும் நீங்களேயாய்ப் பரந்து கிடக்கின்ற மேகங்களை! தேன் நிறைந்த நல்ல புஷ்பங்கள் சிதறி விழும்படி அவற்றுக்குக் கெடுதியை விளைத்துக் கொண்டு நீங்கள் மழைபொழிவதனால் என்ன பயன்? பிறர்க்குத் தீங்கை விளைப்பதோ உங்களுக்குப் புருஷார்த்தம், இடர்ப்பட்டாரை இன்பக்கடலில் ஆழ்த்த வேண்டாவோ நீங்கள்? முன்னடிகளில் உட்கருத்து. விஸ்லேஷ காலத்திலே எனக்கு உத்தீபங்களாய்க்கொண்டு தோற்றுகின்ற மலர்களை நீங்கள் சிதறவடிப்பது எனக்குச் சந்தோஷந்தான், ஆகிலும் அவ்வளவு செய்தமாத்திரத்தால் பயனில்லை, திருவேங்கடமுடையானோடே நான் ஸம்ஸிலேஷம்டுபெற்று இம்மலர்களைப் போகோபகரணமாகக் கொண்டு களிக்கும்படியாகச் செய்துவைக்கவேணும் என்பதாகவும் கருத்துக்கொள்வர். அநிஷ்டத்தைத் தவிர்ப்பதோடு இஷ்டத்தைக் கொடுப்பதுஞ செய்யவேண்டியதாதலால், இப்போது எனக்கு அநிஷ்டங்களான மலர்களைச் சிதறவடிப்பது மாத்திரம் போதாது, பகவத் ஸம்ஸ்லேஷமாகிற இஷ்டப்ராப்தியையும் பண்ணித்தரவேஞ மென்கை.

English Translation

O Great Clouds, piercing through the sky, raining nectared flowers on the hills of Venkatam over the Lord who tore the Asura’s chest with lion-claws! Ask if he would return the bangles he took from me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்