விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின் ஆகத்து எழுகின்ற*  மேகங்காள்*  வேங்கடத்துத்- 
    தன் ஆகத் திருமங்கை*  தங்கிய சீர் மார்வற்கு* 
    என் ஆகத்து இளங்கொங்கை*  விரும்பித் தாம் நாள்தோறும்* 
    பொன் ஆகம் புல்குதற்கு என்*  புரிவுடைமை செப்புமினே*         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆகத்து மின் எழுகின்ற மேகங்காள் - சரீரத்திலே மின்னல் தோன்றப்பெற்ற மேகங்களே!
என் ஆகத்து - என்மார்விலுண்டான
இள கொங்கை - இளமுலைகளை
தாம் விரும்பி - அவ்வெம்பெருமான் விரும்பி
பொன் ஆகம் புல்குதற்கு - அழகிய தம் மார்வோடே அணையவேணுமென்னும் விஷயத்தில்

விளக்க உரை

எம்பெருமானுடைய கரிய திருமேனியில் மின்னற்கொடி போன்ற பிராட்டி விளங்கும்படியை நினைப்பூட்டிக்கொண்டு மின்னயெழுகின்ற பேகங்களை! நீங்கள் திருவேங்கடமுடையான் பக்கலிலே சென்று ஒருவார்த்தை சொல்லவேணும், அதாவது - எம்மார்பிலுள்ள இளமுலைகளை அவ்வெம்பெருமான் விரும்பி அணைந்துகொண்டே இடைவிடாது கிடக்கவேணுமென்று நான் ஆசைப்பட்டிராநின்றே னென்பதை நீங்கள் போய்ச் சொல்லவேணுமென்கிறாள். ஆகம் என்று உடம்புக்கும் மார்வுக்கும் பெயர் முதலடியில் ஆகத்து என்றது - உடம்பிலே என்றபடி, மின்னலாலே பரபாகஸோபை பெற்றிருக்கிற உடம்பையுடைய மேகங்களை! என்றவாறு. மேகங்காள்! என்றவிடத்து “நடுவே பெரியவுடையார் (ஜடாயுபக்ஷி) வந்து தோற்றினாற் போலேயிருந்த தீ! அவனைப் பிரிந்து நோவுபடுகிற ஸமயத்திலே நீங்கள் வந்து தோற்றினபடியும்.“ என்றருளிச் செய்வர் பெரியவாச்சான் பிள்ளை. இரண்டாமடியில், தன்னாகம் - தன்னிடத்திலே என்றபடி. “சீர்மார்வற்குச் செப்புமினே“ என்று அந்வயம்.

English Translation

O Lighting-spangled dark clouds! Go now to Venkatam and tell me the Lord, whose chest is resplendent with the Lady Sri, that everyday my tender breasts do yearn for the embrace of his golden frame.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்