விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உண்பது சொல்லில்*  உலகு அளந்தான் வாயமுதம்* 
    கண்படை கொள்ளில்* கடல்வண்ணன் கைத்தலத்தே* 
    பெண் படையார் உன் மேல்*  பெரும் பூசல் சாற்றுகின்றார்* 
    பண் பல செய்கின்றாய்*  பாஞ்சசன்னியமே!*      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாஞ்சசன்னியமே - சங்கே!,
உண்பது சொல்லில் - நீ உண்பது என்ன வென்றால்
உலகு அளந்தான் வாய் அமுதம் - உலகங்களை அளந்தவனான் எம்பெருமானுடைய திருவாயிலுள்ள அம்ருதம்,
கண் படை கொள்ளில் - நீ படுத்துக்கொள்வது எங்கே யென்றால்
கடல் வண்ணன் கை தலத்தே - கடல் போன்ற நிறத்தை யுடையனான அவ்வெம்பெருமானுடைய திருக்கையிலே,

விளக்க உரை

ஓபாஞ்சசன்னியமே! நீ செய்வது சிறிதும் நியாயமாயில்லே, பெண்ணாய்ப் பிறந்தவர்களெல்லாரும் உன்மேல் வசைகூறும்படியான காரியம் நீ செய்கிறாய், அது என்னவென்றால், நீ கண்ணபிரானுடைய வாயமுதத்தை உண்பதும் அவனுடைய கைத்தலத்தில் உறங்குவதுமாயிருக்கிறாய், கோவில் சோற்றைத்தின்று குளத்தில் நீரைக்குடித்துக் கோபுறவாசலிற் கிடந்துறங்குவார்க்குப்போலே உனக்கும் பகவத்ஸம்பந்தம் ஒரு நொடிப்பொழுதும் இடையறாதிருக்கின்றது, இப்படி எம்பெருமானோடேயே ஸதாபோது போக்கவேணுமென்று ஆசைப்பட்டிருக்கிற பல்லாயிரம் பெண்களை வயிறெரிந்துநிற்கவிட்டு நீயொருவனே இப்படிப் போதுபோக்குவதானது நியாயமேயல்ல, ‘இப்பாவி இப்படி அநியாயம்செய்கிறானே‘ யென்றுமுறை யிடாதாரில்லைகாண் என்கிறாள். கண்படை - உறக்கம், பெண்படையார் - திரள்திரளாயுள்ள பெண்கள் என்றபடி, திருவாய்ப்பாடியிலுள்ளாரும் ஸ்ரீமதுரையிலுள்ளாரும். பூசல் - பேரொலிசெய்தல். பண்பல - பண்பு அல-, பண்பு - நியாயம், அல-அல்ல - அல்லாத்து, நியாயமல்லாதது அநியாயம். பகவத் விஷயத்தில் அவகாஹித்தவர்கள் “***“ (ஏகஃஸ்வாதுநபுஞஜீத) (இன்னிகனிதனியருந்தான்) என்றபடி மற்றும் ருசியுடையாரையுங் கூட்டிக்கொண்டு திரளாக விருந்து அநுபவிக்கவேண்டியிருக்க, நீ ஏகாகியாய் அநுபவித்து அநீதியென்க.

English Translation

Speak of food; the beautiful Lord Vamana’s mouth-nectar is yours. For a place of rest, you have the dark Lard’s palm. A bevy of beautiful dames rise in protest. What you do is not fair, O Conch!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்