விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செங்கமல நாள் மலர்மேல்*  தேன் நுகரும் அன்னம் போல்* 
    செங்கண் கருமேனி*  வாசுதேவனுடைய* 
    அங்கைத் தலம் ஏறி*  அன்ன-வசஞ் செய்யும்* 
    சங்கு-அரையா! உன் செல்வம்* சால அழகியதே!*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாள் - அப்போதலர்ந்த
செம் கமலம் மலர் மேல் - செந்தாமரைப் பூவில் (படிந்து)
தேன் - தேனை
நுகரும் - பருகுகின்ற
அன்னம்போல் - அன்னப்பறவை போன்று

விளக்க உரை

அப்போதலர்ந்த செந்தாமரை மலரின்மேலே அன்னம் படிந்து மதுபாநம் பண்ணுமாபோலே கண்ணபிரானுடைய அழகிய திருக்கையின்மேலேறி மதுபாநம் பண்ணி உணவுக்கீடாக உறக்கங்கொள்ளுகிற திருச்சங்கே! உன் போகத்தின் பெருமையை நான் என்னசொல்வேன் என்கிறாள். வெண்மைநிறத்தில் ஸாம்யத்தைக்கொண்டு சங்கை அன்னத்தோடு ஒப்பிட்டாள். அங்கைத்தலமானது செங்கமல நாண்மலரோடு ஒப்பிடப்பட்டது. செங்கமலநாண்மலரில் மது உள்ளமையால் அதனை அன்னம் பருகுவதுண்டு, இங்குச் செங்கமலமலராகச் சொல்லப்பட்ட திருக்கையில் மது இல்லையே, திருவாயில்தானே மது உண்டு. “அங்கைத்தலமேலி“ என்றிருக்கையாலே இந்த உபமாநோபமேயபாவம் எங்ஙனேபொருந்தும்? என்று சிலர் சங்கிப்பர்கள், - அன்னமானது செங்கமல நாண்மலரின்மேல் இருந்துகொண்டு தேனேநுகர்வது போல் - என்று விவக்ஷிதமாகக் கொண்டால் இந்தஸிங்கைக்குப் பரிஹாரமாகும். செங்கமலநாண்மலரிமேல் அன்னத்தின் இருப்புக்கும் வாசுதேவனுடைய அங்கைத்தலத்தில் சங்கின் இருப்புக்கும் உபமாநோபமேயபாவம் விவக்ஷிதமென்க.

English Translation

O Best-among-conches! Your lot is beautiful. You are perched on the shoulders of the dark Lord of lotus-eyes, like a swan gracefully resting on a lake, after shipping nectar from day-fresh lotus flowers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்