விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!*  மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? 
    நாற்றத் துழாய் முடி நாராயணன்*  நம்மால்- போற்றப் பறை தரும் புண்ணியனால்*  பண்டு ஒருநாள்-
    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்*  தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ* 
    ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே*  தேற்றமாய் வந்து திற-ஏலோர் எம்பாவாய்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுவர்க்கம் புகுகின்ற - ஸுகாநுபவம் பண்ணுநின்ற
அம்மனாய் - அம்மே!
வாசல்திறவாதார் - வாசற்கதவைத் திறவாதவர்கள்
மாற்றமும் தாராரோ - ஒருவாய்ச் சொல்லுங்கொடுக்கமாட்டாரோ?
நாற்றமும் துழாய் முடி - நறு நாற்றம் வீசாநின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்துள்ள திருமுடியையுடைய

விளக்க உரை

உரை:1

எல்லாரு முடன கூடிக் குளிக்கக் கடவோம், உடன கூடி நோன்பு நோற்கக் கடவோம். உடன் கூடிக் கிருஷ்ணாநுபவம் பண்ணக்கடவோம்’ என்று சொல்லிவைத்து, நாங்கள் உணர்த்தவும் உணராதே கிடந்துறங்கதியேலும், ‘இப்போது கதவைத்திறக்க அவகாசமில்லை’ என்றொரு வாய்ப்பேச்சுத்தான் சொன்னாலாகாதோ? இங்ஙனொத்த பேருறக்கம் உனக்கு வந்த வழி யாதுகொல்? பண்டு இராமபிரானது அம்புக்கு இலக்காகி மாண்டொழிந்த கும்பகரணன் தனது உறக்கத்தை உனக்குத் தந்தொழிந்தானோதான்? ஆ! சால நன்று இது; இப்பேருறக்கம் உனக்கு ஆகாதுகாண்; நீ ஒருத்தி எங்கள் திரளில் வந்து கூடாமையால் இத்திரள் இருள் மூடிக்கிடக்குமாற்றை வந்து காணாய் தோழி! என்கிறார்கள். முதலடிக்கு மூன்றுவகையாகக் கருத்துரைக்கலாம் :- கண்ணபிரானுடைய திருமாளிகைக்கு அடுத்த திருமாளிகையாய் இடைச் சுவரற்றிருப்பதனால், கண்ணபிரானோடு இடைவீடின்றிச் சுகாநுபவம் பண்ணும்படி நீ நோற்ற நோன்பு என கொல்? முன்பிறவியில் நோற்ற நோன்பின் பயனாக இப்போது கிருஷ்ணாநுபவ ஸுகம் பெற்று நிற்றி என்கிறாளென்பது முதற் கருத்து.

உரை:2

நோன்பு நோற்றுச் சுவர்க்க உலகம் புகுவேன் என்று சொன்ன எங்கள் தலைவியே! வாசல் கதவைத் தான் திறக்கவில்லை; பதிலாவது சொல்லக் கூடாதா? நறுமணம் மிகுந்த துளசியை திருமுடியில் சூடிய நாராயணன் நம்மால் போற்றப்பட்டு நாம் வேண்டியதெல்லாம் தருவான். அந்த புண்ணியனால் முன்பு ஒரு நாள் எமனின் வாயில் விழுந்த கும்பகருணன் தான் உன்னிடம் தோற்று அவனது பெரும் தூக்கத்தை உனக்குத் தந்தானோ? அளவிடமுடியாத பெரும் தூக்கத்தை உடையவளே! அழகிய கும்பத்தைப் போன்ற அழகுடையவளே! உறக்கம் தெளிந்து வந்து கதவை திறப்பாய்!

English Translation

O cousin entering high heaven through vows, will you not answer, nor open the DOORS? In the days of Yore, the demon king Kumbhakarna fell into the jaws of death through our blessed boon giver, Narayana, who wears the fragrant Tulasi on his crown. But did the demon then transfer his sleep to you? O Rare gem of immense stupour! Come quickly, open the door!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்