விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்*  ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி* 
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து*  பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்*
    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து*  தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் 
    வாழ உலகினில் பெய்திடாய்*  நாங்களும் மார்கழி நீர் ஆட மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழி மழை கண்ணா - மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான பர்ஜந்யனே !
ஆழியுள் புக்கு - கடலினுட் புகுந்து
முகந்து கொடு - (அங்குள்ள நீரை) மொண்டு கொடு
ஆர்த்து - கர்ஜனை பண்ணி (பேரொலி செய்து)
ஏறி - (ஆகாயத்தே) ஏறி,

விளக்க உரை

உரை:1

ஆயர் சிறுமியர் தாம் மார்கழி நீராடினால் நாட்டுக்கு விளையும் நன்மைகளை இங்ஙனே மநோரதித்துக்கொண்டிருக்க, பர்ஜந்யனும், ‘எம்பெருமானடிபணியுமவர்கட்குச் சிறிது கிஞ்சித்கரித்து நாமும் நமது ஸ்வரூபத்தை நிறம் பெறுவித்துக் கொள்ள வேணும்” எனக் கருதி, ‘நான் உங்கள் திறத்துச்செய்யவேண்டுமடிமைத் திறத்தை ஆய்ந்துரைக்கவேணும்’ என்று இவர்களின் நியமநத்தைப் பிரார்த்தித்து நிற்க, ஆய்ச்சிகள், “பர்ஜந்யனே ! ‘பெண்கள் நோற்றபடி யென் ! மழை பெய்தபடி யென்!’ என்று அனைவரும் தலைதுலுக்கிக் கொண்டாடும்படி வர்ஷிக்கவேணும்” என்று அவன் செய்யவேண்டு மடிமையைக் கையோலை செய்துகொடுக்கின்றனர்; இப்பாட்டால். (பர;ஜந்யன் - மழைக்கு நிர்வாஹகன்; மேகமென்றவாறு.) வாராய் பர்ஜந்யனே ! உனது ஔதார்யத்தை நீ எள்ளளவும் ஒளிக்கலாகாது; கடலினுட்புகுந்து அங்குள்ள நீரை முற்றும் முகந்துகொண்டு பெருமுழக்கஞ்செய்து வானத்தின் மீதேறி எம்பெருமானது திருமேனிபோலக் கருமைபூண்டு, அவனது வலங்கை யாழிபோல் மின்னி இடங்கைச் சங்கம்போல் அதிர்ந்து, ஸ்ரீ சார்ங்கம் சரமழை பொழியுமாறு போல நாடெங்கும் நீரைச்சொரிந்து எமது மார்கழி நீராட்டத்தை மகிழ்ச்சியுடனே தலைக்கட்டவேணும். என்பது - இவர்கள் கட்டளையிடும் பரிசு.

உரை:2

"மழை பொழிவதற்கு காரணக்கடவுளான கண்ணா! உன் மழையாகிய குடையில் சிறிதும் தேக்கி வைத்துக்கொள்ளாதே! கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, கம்பீர முழக்கமிட்டு, ஆகாயம் முழுதும் பரவி, திருமாலின் கருமேனி போன்று நிறம்பெற்று, மூங்கில் போன்ற அழகிய தோள்களையும், திருமாலின் வலக்கரத்தில் ஏந்திக்கொண்டுள்ள சுரதர்சன சக்கரம் போல் பிரகாச ஒளி வீசிக்கொண்டு, அவனது இடக்கரத்தில் ஏந்திக்கொண்டுள்ள சங்கின் சப்தம் போல் இடி இடித்து முழங்கி, அப்பரமன் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லால் எய்தப்பட்ட அம்பு மழைபோல், உலகமக்கள் வாழும்படியாகவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும், சரமாரியாக மழை பொழிய வேண்டுகிறோம்."

English Translation

O Dark rain cloud! Dear Krishna! Pray reveal yourself in full measure. Enter the deep ocean, gorge yourself, roar and ascend high; darken like the hue of the primeval Lord Padmanabha, strike lightning like the resplendent discus on his mighty shoulder, roar with thunder like the great conch in his hand, come pouring down on us like arrows cast from his Saranga bow, that we too may live and enjoy the bath- festival of Margali.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்