விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உற்றஉறு  பிணிநோய்காள்!*  உமக்கு ஒன்றுசொல்லுகேன் கேண்மின்* 
    பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்*  பேணும் திருக்கோயில்கண்டீர்*
    அற்றம்உரைக்கின்றேன்*  இன்னம் ஆழ்வினைகாள்!*  உமக்குஇங்குஓர்-
    பற்றில்லை கண்டீர்நடமின்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உற்ற - நெடுநாளாக இருக்கிற
உறுபிணி - மிக்க வருத்தத்தைச்செய்கிற
நோகாள் - நோய்களே!
உமக்கு - உங்களுக்கு
ஒன்று - ஒருவார்த்தை

விளக்க உரை

யசோதைப்பிராட்டிக்கு அடங்கி நடந்த ஸ்ரீகிருஷ்ணன் எனக்கு எளியனாய்நின்று தானுகந்தருளின நிலங்களிலுள்ள அன்புகொண்டு என் தேஹத்தில் எழுந்தருளியிருக்கிறான்; இதை ப்ரத்யக்ஷமாகக் காணுங்கோளென்று நோய்களுக்குக் கூறி, பிறகு அந்நோய்களுக்குங் காரணமான பாபங்களை நோக்கி மீண்டும் ‘உங்களுக்காகத் தீர்ந்த ஒரு விஷயங்சொல்லுகின்றேன்: அதாவது- என்னுடைய தேஹம் முன்போலன்றி ஸ்ரீகிருஷ்ணன் குடிபுகுந்ததனால் காவல்பெற்றிருக்கின்றது; ஆகையால் இந்த தேஹத்தில் நீங்கள் நிராசையாய்ப் போய்விடுங்கள்’ என்றருளிச் செய்கிறார்

English Translation

O Ye great miserable sicknesses! Listen, Let me tell you something. Know that this, my body, is a temple where the cowherd-Lord resides. O Deep-rooted miseries, let me repeat; you have not place here, know it. So more on. No more like old, the fortress is on guard!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்