விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காமர் தாதை கருதலர்சிங்கம்*  காண இனிய கருங்குழற் குட்டன்* 
    வாமனன் என்மரகத வண்ணன்*  மாதவன் மதுசூதனன் தன்னைச்*
    சேமநன்குஅமரும் புதுவையர்கோன்*  விட்டுசித்தன் வியன் தமிழ்பத்தும்* 
    நாமம்என்று நவின்றுஉரைப்பார்கள்*  நண்ணுவார் ஒல்லை நாரணன்உலகே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காண - ஸேவிப்பதற்கு
இனிய - அழகாயிருக்கிற
கரு குழல் குட்டன் - கறுத்த குழலையுடைய சிறுக்கனானவனும்
வாமனன் - வாமாநாவதாரம் செய்தருளியவனும்
என் - எனக்குத் தலைவனும்

விளக்க உரை

ற்றைத்திருமொழிகளிற் காட்டில் இத்திருமொழியில் எம்பெருமானுடைய திருநாமங்கள் விசேஷமாக அருளிச்செய்யப்பட்டிருப்பதனால், இத் திருமொழியை ஸஹஸ்ர நாமத்யாயத்தோடொக்கப் பிரதிபத்தி பண்ணுதல் எற்குமென்க. (காமர் தாதை) ருக்மிணிப்பிராட்டியினிடத்து மந்மதனுடைய அம்சமாகப் பிறந்த பிரத்யும்நனுக்குக் கண்ணபிரான் தந்தையாதல் அறிக. மரதகவண்ணன்- வடசொற்றொடர்த்திரிபு. ‘மதுசூதன்றன்னை” என்றும் ஓதுவர். சேமம் நன்று அமருகையாவது - எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவதில் மிக்க ஆவல் கொண்டிருக்கை.

English Translation

This decad of sweet Tamil songs by Vishnuchitta, King of prosperous Puduvai town, in praise of the Lord who is kamadeva’s father, lion against disbelievers, beautiful dark-tressed lad Vamana, emerald-hue Madhava, Madhusudana, will confer the bliss of Narayana’s world on those who recite it as a Mantra.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்