விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!*  கோநிரை மேய்த்தவனே! எம்மானே!* 
    அன்றுமுதல் இன்றறுதியாக*  ஆதியஞ்சோதி மறந்தறியேன்* 
    நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது* 
    அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குன்று - கோவர்த்தநமலையை
எடுத்து - (குடையாக) எடுத்து (ப்பிடித்து)
ஆநிரை - பசுக்களின் திரளை
காத்து - ரஷித்தருளின
ஆயா - ஆயனே (கோபாலானே!)

விளக்க உரை

அன்று முதல்- கர்ப்பவாஸம் முதலான என்றும் கொளா அறுதி முடிவு. “அன்றமுதலின்றறுதியா” என்ற பாடம் செய்யுளின்பத்துக்கு மாறுபாடாம். அன்று முதல் இன்றளவாக ஆகியஞ்சோதியை மறந்தறியேன் ஏன்னா நின்றுகொண்டு, - என்றால் விருத்தமன்றோலென்னில்; அதிசங்காமூலமாக கலக்கத்தினால் வந்த அச்சத்தாலே இன்னனே வேண்டுகிறபடி. (இத் திருமொழியின் அவதாரிகையில் இது விரியும்.) “பற்றும்போது அங்கு என்னைக் காக்க வேண்டும்” என்றிவ்வளவே போதுமாயிருக்க, அன்று என்று அதிகமாக ஒரு சொல் சொன்னது அவ்வவஸ்தையின் கொடுமையைக் கருதியாமென்க.

English Translation

O Lord of Srirangam reclining on a serpent bed! O cowherd-Lord, my Master, O Lord who held aloft the Govardhana mount and saved the cows! From that day on to this, I have scarcely ever lost sight of your pristing glory. When Yama’s terrible agents grab and seize me, then and there, protect me, you must!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்