விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மைத்துனன்மார் காதலியை*  மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி* 
    உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட*  உயிராளன் உறையும்கோயில்* 
    பத்தர்களும் பகவர்களும்*  பழமொழிவாய் முனிவர்களும் பரந்தநாடும்* 
    சித்தர்களும் தொழுதிறைஞ்சத்*  திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மைத்துனன் மாரி - (தனது) மைத்துனன்மாரான பாண்டவர்களுடைய
காதலியை - பத்தினியாகிய த்ரௌபதியை
மயிர் முடிப்பித்து - விரிந்த கூந்தலை முடியும் படி செய்தருளி
அவர்களைளேயே - அப்பாண்டவர்களையே
மன்னர் ஆக்கி - அரசான்வித்தளியவனும்

விளக்க உரை

பாண்டவர் மனைவியாகிற த்ரௌபதியானவள் தான் ரஜஸ்வலையா செய்யாது தன்னைச் சபையில் மாநபங்கம்செய்ய மயிரைப்பிடித்திழுத்த நன் மீதும், அவனுக்கு உபபலமாயிருந்த துரியோதநாதியர்மீதும் கொண்டு இவர்களை உயிர்மாள்வித்தன்றி நாள் இவ்வரிந்தகூந்தலை முடிப்பதில்லை” என்ற சபதம் பண்ணிக்கொண்ட பதினான்கு வருஷம் காட்டில் அந்தகாலத்தோடும், பின்வு நாட்டிற்சேந்ர்நத காலத்தோடும் வாசியற விரிந்த தலையுந் தானுமாகத் திரிகிறபடி யைக்கண்ட கண்ணபிரான் “நாம் இவள் ஸங்கல் பத்தின்படியே காரியஞ் செய்துகொடுத்து இவளது கூந்தலை முடிப்பித்தாலன்றோ ‘சரணாகதரக்ஷகன்’ என்ற நாம் படைத்துள்ள விருது பிழைக்கலாவது” என்றெண்ணி அவ்வண்ணமே செய்யக் கருதித் தூதுநடத்தும் தேர் முன் நின்ற பாண்டவர்களுக்குத் துணைசெய்து, அவளது ஸங்கல்பத்தை ஈடேற்றி கூந்தலை முடிப்பித்து அப்பாண்டவர் தம்மையே அரசாய்வித்தவாறு கூறுவது முதலடி. கண்ணபிரான் தூதுசென்றதும் தேர்முன் நின்றதும், பிரபத்தியுபதேசம் பண்ணினதுமெல்லாம் காஞ்சாலியின் கூந்தலை முடிப்பதற்காகவேயென்பது அறியத்தக்கது. “அர்ஜுனனுக்கு தூத்யஸாரத்யங்கள் பண்ணிற்ற்றும் ப்ரபத்த துபதேசம் பண்ணிtற்றுமிளுளக்காக” என்ற ஸ்ரீவசநபூஷண ஸூத்தியின் வியாக்யானத்தில் இனத் விவரணம் காண்க; “பந்தார் விரலாள் பாஞ்சாலிகூந்தல் முடிக்கப் பாரதத்துக் கந்தார் களிற்றக் கழன்மன்னர் நகலங்கச் சங்கம் “வாய் வைத்தான்” என்றார் திருமங்கையாழ்வாரும். மைத்துனன்மார் - பெண்கொடுத்துக் கொள்ளுதற்கு உரிய உறவுமுறைமை உடையாரை மைத்துனன்மாரென்பது மரபாதல்பற்றிப் பாண்டவர்கள் கண்ணபிரானுக்கு மைத்துனன்மாராகக் கூறப்படுகின்ற ரென்பது கேள்வி. காதலி - வடமொழியில் ***- ***- என்ற சொற்கள் போலும்.

English Translation

The Lord who is the life of all gave the kingdom to the Pandavas and made their wife Draupadi gather her loosened hair when she vowed to bathe in the Duryodhana’s gore; he revived Abimanyu’s son Parikshit from the charred remains by the touch of his foot. He resides in the temple of Tiru-Arangam. He is the lamp that shines in all directions, worshipped by devotees, mendicants, Vedic seers, Siddhas and the worldly lot.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்