விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூன்தொழுத்தை சிதகுரைப்பக்*  கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு 
    ஈன்றெடுத்த தாயரையும்*  இராச்சியமும் ஆங்கொழிய* 
    கான்தொடுத்த நெறிபோகிக்*  கண்டகரைக் களைந்தானுர்* 
    தேன்தொடுத்த மலர்ச்சோலைத்*  திருவரங்கம் என்பதுவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இராச்சியமும் - ராஜ்யத்தையும்
ஆங்கு ஒழிய - கைவிட்டு
தொழத்தை - அடிமைப்பெண்
தாயார் - பூஜையிற்பன்மை
கண்டகர் - முள்ளைப்போன்றவர்

விளக்க உரை

தண்டகாரணியத்தில் ஜையந்தமென்ற பட்டணத்தில் வஸிப்பவனும் திமித்வஜன் என்று மறுபெயருள்ளவனும் இந்திரனை வென்றவனுமான சம்பரராஸுரனை இந்திரனது வேண்டுகோளின்படி வெல்லுதற் பொருட்டுக் கைகேயியுடன் சென்ற தசரதச்சக்கரவர்த்தி அவ்வஸுரனை எதிர்த்துச் செய்த பெரும்போரில் அவனால் விரணப்பட்டு மூர்ச்சையடைந்த பொழுது, அச்சக்கரவர்த்தியை அசுரர்கள் வதை செய்யாதபடி கைகேயி போர்க்களத்திலிருந்து எடுத்துச்சென்று பாதுகாக்க, மூர்ச்சை தெளிந்தவுடன் தசரதன் தனனக்கு கைகேயி செய்த உயிருதவிக்காக அகமகிழ்ந்து தான் அவட்கு அவள் வேண்டும் இரண்டு வரங்கள் கொடுப்பதாக வாக்கு அளிக்க, அவள் அவற்றை பின்பு தனக்கு வேண்டும்பொழுது கேட்டுப் பெற்றுக்கொள்வதாகச் சொல்லியிருந்தாள்; அவவ்வரங்களில் ஒன்றாகப் பரதனது பட்டாபிஷேகத்தையும், மற்றொன்றாக இராமபிரானது வநவாஸத்தையும் கேட்கும்படி ஞாபகப்படுத்தி உபாயங்கூறித் தூண்டின கூனியின் சொற்படி தன்னைக்காட்டு கெழுந்தருளச் சொன்ன கைகேயியின் நியமநத்தின்படி ராஜ்யம் முதலியவற்றையெல்லாம் துறந்து இராமபிரான் தண்டகராணியத்திற்சென்று புகுந்து அங்கு ஜகஸ்தாகத்தில் இருந்துகொண்டு ஸாதுக்களை நலிந்து திரிந்த அரக்கர்களை அழித்தருளினமை அறிக.

English Translation

Nectar-flowing flower gardens surround Tiru-Arangam. It is the abode of the Lord who relinquished home and kingdom and went into exile in the forest, when the hunchback maid spoke ill, and harsh words fell from the queen’s cruel lips.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்