விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாதவத்தோன் புத்திரன்போய்*  மறிகடல்வாய் மாண்டானை* 
    ஓதுவித்த தக்கணையா*  உருவுருவே கொடுத்தானுர்* 
    தோதவத்தித் தூய்மறையோர்*  துறைபடியத் துளும்பிஎங்கும்* 
    போதில் வைத்த தேன்சொரியும்*  புனலரங்கம் என்பதுவே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யறி - அலையெறியா நின்றுள்ள
கடல்வாய் போய் - கடலிற் புகுந்து
மாண்டான் - முதலைவாயி லகப்பட்டு உயிரொழிந்த
மாதவத்தோன் புத்திரனே - மஹா தபஸ்வியான ஸாந்தீபிணியினுடைய பிள்ளையை
ஒதுவித்த தக்கணையா - (ஸாந்திபிகி தன்னை) அத்யாகம் பண்ணுவித்ததற்கு தக்ஷிணையாக

விளக்க உரை

கண்ணபிரான் ஸாந்தீபிநி யென்னும் ப்ராஹ்மணோத்தமம் பக்கல் ஸகல சாஸ்திரங்களையும் அத்தியயநம் பண்ணின அநந்தரம் குருக்ஷிணைகொடுக்கத் தேடுகின்றவளவிலே, அவ்வாசாரியரும் இவனுடைய அதிமாநுஷசேஷ்டிதங்களை அறிந்தவராகையாலே, ‘பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு ப்ரபான தீர்த்தக்கட்டதிற் கடலில் முழுகி இறந்துபோன என் புத்திரனைக் கொணடுவந்து தர வேண்டும்’ என்று அபேக்ஷிக்க, ‘அப்படியே செய்கிறேன்’ என்று, அப்புத்திரனைக் கொண்டுபோன சங்கின் உருவம்தரித்துச் சமுத்திரத்தில் வாஸஞ் செய்கின்ற பஞ்சஜகன் என்ற அஸுரனைக் கொன்று, யமபட்டணத்துக்கு எழுந்தருளி, அங்கு யாதனையிற்கிடந்த அக்குமாரனைப் பூர்வதேஹத்தில் ஒன்றும் விசேஷமறக் கொணர்ந்து கொடுத்தருளிய வரலாறு முன்னடிகளிற் கூறியது. ‘மாண்டானை” என்ற விடத்துள்ள இரண்டனுருபு, “புத்திரன்” என்ற பெயரோடு கூட்டியுரைக்கப்பட்டது. நக்கணை- உக்ஷிணா என்ற வடசொல்லிகாரம். பின்னடிகளின் கருத்து:- கங்கையிற் புனிதமாய காவிரியில் பெரிய பெருமாளுடைய திருக்கண்நோக்கான திருமுகத்துறை முதலான பலதுறைகளில் ஆசாரபரரான வைதிக ஸ்ரீவைஷ்ணவர்கள் திரள் திரளாக வந்து குடைந்து நீராட அதனால் அக்காவேரியடங்கலும் அலைமோதப்பெற்று, அவ்வலைகளினால் தாமரை மலர்களின் நாளங்கள் அலைக்கப்பட, அதனால் அப்பூக்களினின்றும் தேன் பெருக, அத்துடன் சொந்த தீர்த்தத்தையுடைய திருவரங்கமென்பதாம்.

English Translation

Pure Vedic seers bathe in the Kaveri River, causing waves that spill the nectar from lotus blooms growing in the waters of Tiru-Arangam, Srirangam, and wear laundered vestures. It is the abode of the Lord Krishna who restored to his preceptor Sandipini the son who was lost at sea, --as he was, --as fee for his tuition with him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்