விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செழுந்திரைப் பாற்கடல் கண்துயில் மாயன்* திருவடிக்கீழ்-
    விழுந்திருப்பார் நெஞ்சில்*  மேவு நல்ஞானி*   நல் வேதியர்கள்-
    தொழும் திருப்பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்*
    எழுந்திரைத்து ஆடும் இடம்*  அடியேனுக்கு இருப்பிடமே. (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செழு திரை பால் கடல்-அழகிய அலைகளையுடைய திருப்பாற் கடலில்;
கண் துயில்-பள்ளிகொண்டிராநின்ற;
மாயன்-ஸர்வேச்வரனாடைய;
திரு அடி கீழ்-திருவடிகளின் கீழே;
விழுந்து இருப்பார்-விழுந்துகிடக்கும் மஹான்களுடைய;

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “ நிரயத் தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும்” என்று ஸம்ஸாரத்தையும் பரமபதத்தையும் வாசியற்றதாகச் சொன்ன அமுதனாரை நோக்கிச் சிலர், ‘உலகத்தில் எல்லாரும் ஸம்ஸாரத்தை வெறுத்துப் பரமபதத்தை ஆசைப்படா நிற்க நீர் ஸம்ஸாரத்தையும் பரமபதத்தையும் துன்பமாகக் கருதிப் பேசுகின்றீரோ, உமக்கு உத்தேச்யமான ஸ்தானம் எது? சொல்லும், என்ன; ஸ்ரீராமாநுஜபக்தர்கள் களித்துக் கூத்தாடுகின்ற இடமே எனக்குப் பரமோத்தேச்யமான ஸ்தானம் என்றார்.

English Translation

Devotees who fall at the feet of the ocean-reclining wonder-lord consider Ramanuja as the enlightened one. Vedic scholars worship his lotus feet. Great souls cry out his name and dance. All those places where they live are holy to me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்