விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து*  தன்மைத்துனன் மார்க்காய்* 
    அரசினையவிய அரசினையருளும்*  அரிபுருடோத்தமன் அமர்வு*
    நிரைநிரையாக நெடியனயூபம்*  நிரந்தரம் ஒழுக்குவிட்டு*  இரண்டு- 
    கரைபுரை வேள்விப்புகை கமழ்கங்கை*  கண்டமென்னும் கடிநகரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெடியன - நீண்டவையாயிராநின்றுள்ள
யூபம் - (பசுக்கள் கட்டுகிற) யூபஸ்தம்பங்களானவை
நிரை நிரை ஆக - திரள் திரளாக
நிரந்தரம் - இடை விடாமல்
ஒழுங்கு விட்டு - நெடுக ஓடாநிற்பதும்

விளக்க உரை

முன்னடிகளிற் குறித்த வரலாற கீழ் “மெச்சூது சங்கமிடத்தான்” என்ற பாட்டின் உரையிற் காணத்தக்கது. அரி -ஹரி. கங்கையிற் பற்பல யூபஸ்தம்பங்கள் இடைவிடாது நெடுக அடித்துக்கொண்டு ஓடுமென்பது மூன்றாமடி. பூபம் – யாகப்பசுவைக் கட்டுந்தறி; வடசொல். நிரந்தரம்- வடசொல், இரண்டு கரைபொரு - இரண்டு கரைகளும் ஒருபடிப்பட; இரண்டு கரைகளிலும் என்றாவது.

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga which is framed by closely-knit rows of cow pegs on either side, with the fragrant smoke of the fire-alter filling the air. It is the abode of our Lord Purushottama, the king of fortressed Dvaraka in the Western sea, who destroyed the king Duryodhana and gave the kingdom to his brothers-in-law the Pandavas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்