விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீர்கொண்டு பேரறம் செய்து,*  நல்வீடு செறிதும் என்னும்* 
    பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன்,*  உன் பதயுகமாம்-
    ஏர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன்*  உன்னுடைய- 
    கார்கொண்ட வண்மை*  இராமாநுச! இது கண்டுகொள்ளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இராமநுசா - எம்பெருமானாரே;
சீர் கொண்டு - சமம் தமம் முதலிய குணங்களை யுடையராய்;
பேர்அறம் செய்து - சிறந்த தருமமாகிய சரணாகதி யோகத்தை யநுஷ்டித்து;
நுல் வீடு செறிதும் என்னும்  - பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தை அடைந்திடுவோம் என்றிருக்கிற;
பார்கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் - ப்ரஸித்தமான ப்ரபாவத்தையுடைய ப்ரபாவத்தையுடைய ப்ரபந்நர்களுடைய கோஷ்டியில் நான் சேர்ந்தவனல்லேன்;

விளக்க உரை

சரமச்லோகத்திலே கண்ணபிரான் நியமித்தபடியே நாம் சரணாகதியை அநுஷ்டித்து விட்டோமாகையால் நமக்கு மோக்ஷம் கைபுகுந்துவிட்ட தேயாமென்று அறுதியிட்டிருக்கும் மஹான்களில் அடியேன் சோர்ந்தவனல்லேன்; அப்படி அடியேன் ஒன்றும் அநுஷ்டிக்கவில்லை. தேவரீருடைய திருவடிகளாகிற மோக்ஷத்தை அடைந்திடத் தடையில்லை யென்கிறமனவுறுதியே அடியேனுக்குள்ளது என்றாராயிற்று.

English Translation

O Ramanuja! I am not one among the noble ones of the world who practise the exalted path of Bhakti-yoga and attain the perfect freedom of Maksha. Effortlessly, I will attain the great liberation of Vaikunta, through your dark-cloud-like benevolence, - just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்