விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி*  கருதரிய-
    வருத்தத்தினால்*  மிக வஞ்சித்து*  நீயிந்த மண்ணகத்தே-
    திருத்தித் திருமகள் கேள்வனு ஆக்கிய பின்*  என் நெஞ்சில்-
    பொருத்தப் படாது,*  எம்இராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம் இராமாநுச - எம்பெருமானைரை;
நீ - தேவரீர்;
கருத அரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து - நெஞ்சால் நினைக்க முடியாத பரிச் ரமங்கள் பட்டு என்னை நன்றாக ஏமாத்தி;
கருத்தில் புகுந்து - (எனது) நெஞ்சிலே வந்து புகுந்து;
உள்ளில் கள்ளம் கழற்றி - உள்ளேயிருந்த ஆத்மாப ஹார தோஷத்தைப் போக்கி;

விளக்க உரை

எம்பெருனார் தம்மைத் திருத்துகைக்காகப் பட்டபாடுகளை எடுத்துச் சொல்லி, இப்படி என்னைத் திருத்தி உத்தேச்யமான விஷயத்திலே ஆட்படுத்தின பின்பு இனி வேறு எந்த விஷயமும் என்னெஞ்சுக்கு இசையமாட்டாதென்கிறார்.

English Translation

O Ramanuja! You entered my lowly heart and took residence there. Clearing if of wicked deeds and proceeding with exceeding compassion, you corrected me, and made me serve the lord of the lotus dame Lakshmi. No more can false doctrines enter my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்