விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விற்பிடித்துஇறுத்து வேழத்தை முறுக்கி*   மேல்இருந்தவன் தலைசாடி* 
    மற்பொருதுஎழப் பாய்ந்து அரையனை உதைத்த*  மால் புருடோத்தமன் வாழ்வு*
    அற்புதம்உடைய ஐராவதமதமும்*  அவர் இளம்படியர் ஒண்சாந்தும்* 
    கற்பக மலரும் கலந்துஇழி கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அற்புதம் உடைய - ஆச்சர்யமான
ஐராவதம் - ‘ஐராவதம்’ என்னும் (தேவேந்திரனது) யானையினுடைய
மதமும் - மதநீரும்,
அவர் - அத்தேவர்கள் (விரும்பத்தக்க)
இன படியர் - இளம்பருவத்தையுடையவர்களான தேவமாதர்கள் (அணிந்த)

விளக்க உரை

எவ்வகையினாலாவது கண்ணபிரானை கலிய நினைத்த கம்ஸன் தான் ஒரு தநுர்பாகஞ்செய்வதாக அதற்கு அப்பிரானை உறவுமுறையாமையால் அழைக்க, அவ்வண்ணமே கண்ணபிரான் அங்கேற எழுந்தருளிச் செய்த செயல்களைக் கூறுவது,

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga in whose water, the ichors of the celestial elephant Airavata, the fragrant Sandal paste of young goddesses, and the Kalpaka flowers of their tresses, blend and flow. It is the abode of our dear Purushottama; the Lord who took the bow and broke it, then wrenched the elephant and broke the mahout’s head, killed the wrestlers, then sprang on the king and smote him head.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்