விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி*  இன்று யான் இறையும்- 
    வருந்தேன்*  இனி எம் இராமாநுசன்,*  மன்னு மாமலர்த்தாள்-
    பொருந்தா நிலையுடையப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மைசெய்யா* 
    பெருந்தேவரைப் பரவும்,*  பெரியோர் தம் கழல்பிடித்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்றும் நன்மை செய்ய - ஒருவிதமான உபகாரமும் செய்யாத;
பெரு தேவரை - பெரிய பெருமாளை போற்றுகின்ற;
பெரியோர் தம் - ஆழ்வானாகிற மஹானாடைய;
சுழல் இன்று பிடித்து -திருவடிகளை இன்று ஆச்ரயித்தேனானபின்பு;
யான் - இப்படி நிர்மலனாகப் பெற்ற அடியேன்;

விளக்க உரை

 நமது எஜமானராக உள்ள எம்பெருமானாரின் தாமரைமலர் போன்ற அழகான திருவடிகளை ஒரு சில துர்மனம் கொண்டவர்கள் வந்து அண்டாமல் இருக்கக்கூடும். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ப்ரம்மன், சிவனை விடவும் உயர்ந்த நித்யஸூரிகள் எந்தவிதமான நன்மைகளையும் செய்வதில்லை (நித்யஸூரிகளே நன்மை செய்யவில்லை என்றால், பகவான் கண்டிப்பாக ஏதும் செய்யமாட்டான் என்று கருத்து). இப்படிப்பட்ட நித்யஸூரிகளின் திருவடிகளையே எப்போதும் போற்றியபடி உள்ளவர்கள் கூரத்தாழ்வான் போன்ற உயர்ந்தவர்கள் ஆவர் (இங்கு பெருந்தேவர் என்ற பதம் பெரியபெருமாளையும்; பரவும் பெரியோர் என்ற பதம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் போன்றவர்களையும் கூறுவதாகவும் கொள்ளலாம்). இப்படிப்பட்ட பெரியவர்களின் திருவடிகளை நான் அண்டி நின்ற பின்னர், பாசம் என்னும் விலங்கை கழற்றி விட்டேன். இனி நான் ஒரு நொடிப் பொழுதும் ஸம்ஸார துக்கம் மூலம் வருந்தமாட்டேன்.

English Translation

Kurattaivar worshipped Devadiraja whose abiding grace fell on all who took refuge in Ramanuja's lotus feet. My holding on to Kurattaivar's feet has loosened the bonds of sin over me, Now I have no sorrow.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்