விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடலளவாய திசை எட்டினுள்ளும்*  கலியிருளே 
    மிடைதரு காலத்து இராமாநுசன்,*  மிக்க நான்மறையின்-
    சுடரொளியால் அவ்   விருளைத் துரந்திலனேல்*  உயிரை- 
    உடையவன்,*  நாரணன் என்று அறிவாரில்லை உற்றுணர்ந்தே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் - நான்கு ஸமுத்ரங்களை எல்லாவிடங்களிலும்;
கலி இருளே மிடைதரு காலத்து - கலிபுருஷனாகிற அந்த காரமே நெருங்கிக் கிடந்த காலத்தில்;
இராமாநுசன் - எம்பெருமானார் (திருவவதரித்து);
நால் மறையின் - நான்கு வேதங்களின்;

விளக்க உரை

கடல் சூழ்ந்த எட்டுத் திசைகளும் கொண்ட இந்தப் பூமி முழுவதும், கலி புருஷன் தனது ஸ்வபாவம் மூலம் உலகில் உள்ள அனைவருக்கும் அஜ்ஞானம் என்ற இருளை உண்டாக்கினான். இதனால் தர்ம மார்க்கத்தை யாரும் எளிதில் காணாதபடி செய்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பரமபதத்தில் இருந்து இந்த உலகில் எம்பெருமானார் திருஅவதாரம் செய்தார். ஸர்வேச்வரனின் ஸ்வரூபம் மற்றும் ரூபங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நான்கு வேதங்கள் என்ற கொழுந்து விட்டு எரியும் ஒளி கொண்டு, கலிபுருஷனால் உண்டாக்கப்பட்ட அஜ்ஞானம் என்னும் இருளை நீக்கினார். இவ்விதமாக எம்பெருமானார் செய்யவில்லை என்றால் என்ன நிகழ்ந்திருக்கும்? இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் எஜமானனாக நாராயணனே உள்ளான் என்று மிகவும் தெளிவாக ஆராய்ந்து அறிபவர்கள் யாரும் இல்லை என்ற அவலநிலை உண்டாகியிருக்கும்.

English Translation

In these days of Kali when darkness engulfs the world in all the eight Quarters to the very end of the oceans, if Ramanuja had not dispelled that darkness with the light of the four Vedas, we would never have realised the truth that Narayana is the lord and master of all the souls.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்