விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்*  ஒண் சுடர்ஆழியும் சங்கும்* 
    மழுவொடு வாளும் படைக்கலம்உடைய*  மால் புருடோத்தமன் வாழ்வு*
    எழுமையும் கூடி ஈண்டிய பாவம்*  இறைப்பொழுது அளவினில் எல்லாம்* 
    கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எழுமையும் - ஏழு ஜந்மங்களிலும்
கூடி ஈண்டிட - சேர்ந்து திரண்ட
பாவம் எல்லாம் - பாவங்களை யெல்லாம்
இறைப்பொழுது அளவினில் - க்ஷணகாலத்துக்குள்ளே
கழுவிடும் - போக்கிவிடும்படியான

விளக்க உரை

கலப்பையும் உலக்கையும்- பலராமாவதாரத்திலும், மழு- பரசுராமாவதாரத்திலும் கொள்ளப்பட்ட ஆயுதங்களென்க. படைக்கலமுடைய= படைகலம், உடைய என்று பிரித்து, (இவற்றை) ஆயுதமாகவும் ஆபரணாமகவுமுடைய என்று முரைக்கலாம். அநேக ஜந்மஸஞ்சிதமான பாவங்களைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் கழித்து விடும்படியான பெருமையையுடையது கங்கையென்பது பின்னடி. கழுவிடும்- கழுவியிடும்

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga which has the power to wash away in a trice the Karmas collected over seven lives. It is the abode of the adorable Purushottama who bears the plough, the mace, the bow, the radiant discus, the conch, the axe and the dagger as his weapons.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்