விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டவர் சிந்தை கவரும்*  கடிபொழில் தென்அரங்கன்* 
    தொண்டர் குலாவும் இராமானுசனை*  தொகைஇறந்த-
    பண்தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்* 
    கொண்டலை மேவித் தொழும்,*  குடியாம் எங்கள் கோக்குடியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொகை இறந்த - கணக்கில்லாத;
பண்தரு வேதங்கள் - ஸ்வரப்ரதாநங்களான வேதங்கள்;
பார்  மேல் - இப்பூமியிலே;
நிலவிட - ஒங்கி வளரும்படி;
பார்சதருளும் - செய்தருளினவரும்;

விளக்க உரை

எண்ணற்ற வேதங்களை, அனைத்து ஞானமும் அளிக்கவல்ல வேதங்களை, எண்ணற்ற காலம் இருந்துவரும் வேதங்களை இந்த அகண்ட பூமியில் உள்ள ஜைனர்கள், பௌத்தர்கள் போன்றோர் மறுத்தனர். இவர்களைப் போன்றோரை வாதத்தின் மூலம் வீழ்த்தி, வேதங்கள் எங்கும் பரவும்படிச் செய்தார். இப்படிப்பட்ட வேதங்கள் என்னும் மழையைப் பெய்விக்கும் மேகமாக எம்பெருமானார் உள்ளார். திருவரங்கத்தில் உள்ள அழகியமணவாளன், யார் தன்னைக் காண்கிறார்களோ அவர்களின் மனதை அப்போதே பறித்துக் கொள்பவனாக, “மீண்டும் இவனை நாம் எப்போது காண்போம்?”, என்று துடிக்கும்படிச் செய்பவனாக உள்ளான். இப்படிப்பட்ட அரங்கனின் திருவடிகளையே எப்போதும் பற்றியுள்ள அரங்கனின் தொண்டர்கள், அவனை விடுத்து இப்போது எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களை உணர்ந்தவர்களாக, இவரையே சூழ்ந்தபடி உள்ளனர். இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருவடிகளைப் பற்றியபடி உள்ளவர்கள், எந்தக் குலத்தில் பிறந்துள்ளபோதும், அவர்களது குலமே எங்கள் குலம் என்று கூறும்படியாக நாங்கள் உள்ளோம்.

English Translation

The devotees of the Lord of Southern Arangam, -surrounded by attractive fragrant groves, -rejoiced in singing the praise of Ramanuja who established the singing tradition of the Tamil Vedas. Those who worship him as their benevolent raincloud are our hereditary masters!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்