விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆனது செம்மை அறநெறி*  பொய்ம்மை அறுசமயம்- 
    போனது பொன்றி*  இறந்தது வெங்கலி*  பூங்கமலத்-
    தேன்நதி பாய்வயல் தென்அரங்கன் கழல் சென்னிவைத்துத்* 
    தான்அதில் மன்னும்*  இராமானுசன் இத்தலத்து உதித்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூ கமலம்  தேன் - தாமரைப் பூக்களிலுண்டான மகரந்தமானது;
நதி பாய் - ஆறாகப் பெருகப் பெற்ற;
வயல் - கழனிகளையுடைய;
தென் அரங்கன் - ஸ்ரீரங்கத்திலே எழுந்தருளியிருக்கிற பெரிய பெருமாளுடைய;
கழல் - திருவடிகளை;

விளக்க உரை

அழகிய தாமரை மலர்களில் உள்ள தேன் என்னும் ஆறானது எங்கும் பாய்ந்தபடி நிற்கும் வயல்களால் சூழப்பட்டது திருவரங்கம் ஆகும். இந்தத் திருவரங்கத்தில் கண்வளர்ந்தபடி உள்ள பெரியபெருமாளான அழகியமணவாளனின் திருவடிகளை, தாம் பெற்ற உயர்ந்த செல்வம் இதுவே என்று தனது தலையில் வைத்து, அவற்றில் ஈடுபட்டபடி உள்ளவர் எம்பெருமானார் ஆவார். வேதவேதாந்த தர்மங்கள் அனைத்திற்கும் பாதகம் வரும்படியாக ஏற்பட்ட பௌத்தம் முதலான ஆறு மதங்களாலும், கலியுகத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் உள்ளதாலும் துவண்டிருந்த இந்தப் பூமியில் எம்பெருமானார் அவதரித்தார். இதனால் நிகழ்ந்தது என்ன? மறைந்து விட்டிருந்த வேதவேதாந்த மார்க்கங்கள் மீண்டும் தழைத்தன. பொய்யான கருத்துக்களைப் பரப்பிய ஆறு (பௌத்தம், சார்வாகம், சாக்கியம், உலூக்கியம், பாசுபதம் மற்றும் காணாபத்யம்) மதங்களும் நிலை குலைந்தன. நமக்கு அஜ்ஞானம் உண்டாக்கிக் கொண்டிருந்த கலியானது அழிந்தது.

English Translation

The Southern Arangam is surrounded by fields and rivers of nectar flowing from lotus blossoms. Our Ramanuja placed the lord Ranga's feet on his head and himself at Ranga's feet. After Ramanuja's birth on this Earth, the path of righteousness has been established, the heretic six schools of thought have been erased, the terrible kali vanquished.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்