விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூறும் சமயங்கள் ஆறும் குலைய*  குவலயத்தே- 
    மாறன் பணித்த*  மறையுணர்ந்தோனை*  மதியிலியேன்-
    தேறும் ப‌டி என் மனம் புகுந்தானை*  திசைய‌னைத்தும்- 
    ஏறும் குணனை*  இராமானுசனை இறைஞ்சினமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குவலயத்தே - இப்பூமண்டலத்திலே;
மாறன் பணித்த மறை - நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ் வேதத்தை;
உணர்ந்தோனை - கற்று அறிந்தவராயும்;
மதியிலியேன் தேறும்படி - ஜ்ஞாநஹீகனான நானாம் தெளியும்படியாக;
என் மனம் புகுந்தானை - என் ஹ்ருதயத்தலே வந்து புகுந்தவராயும்;

விளக்க உரை

இந்த உடலே ஆத்மா என்றும், உடல் பரிணாமமே ஆத்மா என்றும், அணுவே ஆத்மா என்றும், ஞானம் மட்டுமே உள்ளது என்றும், சூன்யம் மட்டுமே உண்மை என்றும், ப்ரஹ்மம் என்பது குணங்கள் அற்றது என்றும், ப்ரஹ்மம் முதலான பலவும் மித்யா (பொய்) என்றும், ருத்ரனே பரமாத்மா என்றும் – பல்வேறு தாழ்வான, உண்மையற்ற கருத்துக்கள் கூறிய மதங்கள் அனைத்தும் நாசம் அடைந்தன. எப்போது? இந்த உலகத்தில், மயர்வறு மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் அவதாரம் செய்த காரணத்தால் புண்ணியம் அடைந்த உலகில், நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட தமிழ் வேதத்தை அறிந்து, பரிபூர்ண ஞானம் பெற்ற எம்பெருமானாரின் வாதங்களால் ஆகும். அனைத்துத் திசைகளிலும் பரவிய தனது திருக்கல்யாண குணங்களால் புகழ் பெற்ற எம்பெருமானார், சிறிதும் ஞானம் இல்லாத எனது இதயத்தில் வந்து புகுந்து கொண்டார். இப்படியாக இவர் செய்த உபகாரத்திற்கு ஏற்ற கைம்மாறு தெரியாமல், அவரது திருவடிகளிலே பணிந்தேன்.

English Translation

We praise the world-famous Ramanuja who gave us the Sri-Bashyam. He realised the message in Maran Satakopan's Tamil Veda, and put on end to the controversies in the six schools of orthodoxy. He entered my lowly heart and clarified my thoughts as well.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்