விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அதிர்முகம்உடைய வலம்புரி குமிழ்த்தி*  அழல்உமிழ் ஆழிகொண்டுஎறிந்து*  அங்கு- 
    எதிர்முக அசுரர் தலைகளை இடறும்*  எம் புருடோத்தமன் இருக்கை*
    சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*
    கதிர்முக மணிகொண்டுஇழி புனல்கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சங்கரன் சடையினில் - சிவபெருமானுடைய  ஜடையிலும்
தங்கி - தங்கி,
கதிர் - ஒளியுடையனவும்
மணி - சத்தங்களை
கொண்டு - கொழித்துக்கொண்டு

விளக்க உரை

திருமால் உலகமளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற்சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விலக்க, அந்த ஸ்ரீபாததீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாய கங்கை நதியை, ஸூர்யகுலத்துப் பகிருத சக்ரவர்த்த்தி கபிலமுனிவனது கண்ணின் கோபத்தீக்கு இலக்காகி உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த தனது மூதாதையரான ஸகா புத்திரர் அறுபதினாயிரவரை நற்கதிபெறுவிக்கும் பொருட்டு நெடுங்காலந் தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்கு கொணர்கையில், அவனது வேண்டுகோளாற் சிவபிரான் அந்நதியை முடியின் மேல் ஏற்றுச் சிறிது சிறிதாக பூமியில் விட்டனன் என்ற வரலாறு அறியத்தக்கது. ஓங்கி உலகளந்தருளும்போது நமுசி முதலிய அசுரர்கள் “என்னிதுமாயமென்னப்பனறிந்திலன், முன்னைவண்ணமே கொண்டவளவாய்” என்று தடை செய்ய, அப்போது சங்கை முழங்கியும், ஆழியை எறிந்தும் அவர்களைத் தொலைத்தருளினமை முன்னடிகளில் கூறியது. “குமிழ்த்தி” “எறிந்து” என்ற வினையெச்சமிரண்டும், “இடம்” என்ற பெயரெச்சத்தோடு இயையும், இம்முன்னடிகளிற் கூறிய வரலாறு, ஸாதாரணாமகத் தேவாஸுரயுதத்த காலங்களில் நடந்ததாகக் கொள்ளவுங்கூடும். “தலைகளையிடறும்” என்றது அவர்களைத் தொலைத்தமையைக் கூறியவாறு.

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga whose water flows from Brahma’s hands, over Trivikrama’s feet, through Siva’s mat hair, washing radiant gems down the course. It is the abode of my Purushottama who wields the sonorous conch and the radiant discus, and who rolls the heads of wicked Asuras.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்