விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூட்டும் விதி என்று கூடுங்கொலோ,*  தென் குருகைப்பிரான்- 
    பாட்டென்னும்*  வேதப் பசுந்தமிழ் தன்னை,*  தன் பத்தியென்னும்-
    வீட்டின்கண் வைத்த இராமானுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்* 
    ஈட்டங்கள் தன்னை,*  என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தென் குருகை பிரான் - நம்மாழ்வாருடைய;
பாட்டு என்னும் - பாசுரங்கள் என்று ப்ரஸித்தமாய்;
வேதம் - வேதரூபமாய்;
பசும் தமிழ்தன்னை - செந்தமிழாயிருக்கின்ற திருவாய் மொழியை
தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த - தம்முடைய பக்தியாகிற மாளிகையிலே ஸ்தாபித்தருளிய;

விளக்க உரை

தென்திசையில், பரமபதத்திற்கு இணையான ஸ்வபாவம் கொண்ட ஊராகிய ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர் நம்மாழ்வார் ஆவார். அவருடைய திருவாய்மொழி என்பது செந்தமிழில் செய்யப்பட்ட வேதம் என்று கூறும்படி உள்ளது. இப்படிப்பட்ட திருவாய்மொழியை – ஈன்ற முதல் தாய் சடகோபன், இதத்தாய் இராமானுசன் – என்னும்படி, தனது இதயத்தில் எப்போதும் நிலை நிறுத்தியவர் எம்பெருமானார் ஆவார். அந்தத் திருவாய்மொழியை எப்போதும் கேட்டபடியும், உபதேசம் செய்தபடியும், வ்யாக்யானம் செய்தபடியும், திருக்குருகைபிரான் பிள்ளான் மூலம் வ்யாக்யானம் செய்வித்தபடியும் இராமானுசரின் திருக்கல்யாண குணங்கள் அமைந்திருந்தன. இப்படியாக எம்பெருமானாரின் குணங்கள் உள்ளன என்று அறிந்தவர்கள் கூரத்தாழ்வான், முதலியாண்டான் போன்றவர்கள் ஆவர். இவர்களையே எப்போதும் என் கண்கள் பார்த்தபடியும், அதனால் நான் ஆனந்தம் கொண்டபடியும் இருக்கும் உயர்ந்த வாய்ப்பு எப்போது அடியேனுக்குக் கூடுமோ?

English Translation

Ramanuja firmly established the Bhakti path, in which the famed Tamil Vedas, -the sweet songs of Southern Kurugar city's king, -are the means of union with the divine. O when will my eyes rejoice and see bands of devotees who realise the truth in this!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்