விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கதிக்குப் பதறி*  வெங்கானமும் கல்லும்  கடலுமெல்லாம்- 
    கொதிக்க*  தவம்செய்யும் கொள்கை அற்றேன்,*  கொல்லி காவலன் சொல்- 
    பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே* 
    துதிக்கும் பரமன்*  இராமானுசன் என்னைச் சோர்விலனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொல்லி காவலன் - குலசேகரப் பெருமாளாலே அருளிச் செய்யப்பட்டதாய்;
கலை சொல் பதிக்கும் - சாஸ்திரச் சொற்கள் அமையப் பெற்றதான பொருமாள் திருமொழிப் பரசுரங்களை;
பாடும் பெரியவர் - பாடுகின்ற பெரியோர்களது;
பாதங்களே - திருவடிகளையே;
துதிக்கும் - ஸ்தோத்ரம் செய்பவராய்;

விளக்க உரை

உரை:1

ஸகல சாஸ்த்ரங்களின் ஸாரப்பொருள்களையும் திரட்டி ஸ்ரீ குலசேகரப்பெருமான் அருளிச்செய்த பெருமாள் திருமொழி யென்னாந் திவ்யப்ரபந்தத்தை அநுஸந்திக்கின்ற பெரியவர்களது திருவடிகளையே போற்று மியல்வினரான எம்பெருமானார் வந்து தாமே என்னை ஸ்வீகரித்தாராதலால் இனி ஒரு நாளும் அவர் அடியேனைக் கைவிடமாட்டார்; ஆனபின்பு நமக்கு ப்ராப்யம்வேறு ஒன்று மில்லாமையாதே, வநபர்வத ஸமுத்ர தீரங்களில் நின்று க்ரூரமாகச் செய்யும் தவங்களில் இனி எனக்கு அர்வய மில்லை யென்றாராயிற்று. “எல்லாங் கொதிக்கத் தவஞ்செய்யுங் கொள்கை” என்றதற்கு - இவனுடைய தவத்தின் கொடுமையைக் கண்டு கானமும் கல்லும் கடலும் பரிதபிக்கும்படியாக அந்தந்த ஸ்தலங்களிலே நின்று தபஸ்ஸூ பண்ணும் ஸ்வபாவம் என்று பொருள் கூறுவாருமுளர். சோர்வு இலன் - பிரிவிலன் என்றபடி.

உரை:2

கொல்லிநகர் என்று கூறப்படும் திருவஞ்சிக்களம் (கேரளம்) என்ற நகரின் அரசரான குலசேகரப்பெருமாள் செய்தது என்னவெனில் – சாஸ்திரச் சொற்களுக்கு விஷயமாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் விபூதிகள், குணங்கள் ஆகியவற்றை – முத்துக்கள், இரத்தினக் கற்கள் போன்றவற்றைக் கோர்ப்பவர் போன்ற செயல் செய்து, “இருளிரிய சுடர் மணிகள்”, என்று தொடங்கி, “நலந்திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவார்”, என்று முடித்து, இந்தக் கவிதைகளில் அந்தச் சாஸ்திரச் சொற்களைப் பதித்தார். இப்படிப்பட்ட குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியை எப்போதும் அநுஸந்திக்கும் நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, திருமலைநம்பி, திருக்கோட்டீயூர்நம்பி, திருவரங்கப்பெருமாளரையர், திருமாலையாண்டான் போன்றவர்களின் திருவடிகளை மட்டுமே ஆராதித்து வருபவரும், பகவத் விஷயத்தில் இவரை விட உயர்ந்தவர் யாரும் இல்லாமல் உள்ளவரும் ஆகிய எம்பெருமானார் என்னை விட்டு நீங்காமல் எப்போதும் என்னுடன் உள்ளார். இதனால் என்ன நிகழ்ந்தது? மிகவும் உயர்ந்த புருஷார்த்தங்களைப் பெறுவதற்காக – தீயுடன் கூடிய காடுகள், கால்களை வருத்தும் கற்கள் நிறைந்த இடங்கள், அதிக குளிர் உணடாக்கி வாட்டும் நீர் நிலைகள் ஆகியவற்றில் இருந்தபடி, அனைத்து உடல் உறுப்புகளும் வருந்தும்படி தவம் செய்யும் ஸ்வபாவம் நீங்கப் பெற்றேன். (இதன் கருத்து – உடையவரின் திருவடித் தொடர்பு கிட்டிய பின்னர் வேறு பயன் கருதி எந்தச் செயல்களிலும் ஈடுபட வேண்டியதில்லை என்பதாகும்)

English Translation

Kulasekara Alvar, the king of kolli sang with words of artistic majesty. Ramanuja praises the great ones who always sing the Alvar's works. Giving up the severe paths of penance, -standing in the sizzling forest, mountain and ocean for the sake of redemption, -I have found my refuge in Ramanuja. He shall never let me down.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்