விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செய்யும் பசுந்துளபத் தொழில் மாலையும்*  செந்தமிழில்- 
    பெய்யும் மறைத்தமிழ் மாலையும்*  பேராத சீரரங்கத்து- 
    ஐயன் கழற்கணியும் பரன் தாளன்றி*  ஆதரியா- 
    மெய்யன்*  இராமானுசன் சரணே கதி வேறெனக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செய்யும் - (தொண்டரடிப்பொடியாழ்வாராகிற தம்மாலே) செய்யப்பட்ட தாய்;
பசும் துளவம் - பசுமை தங்கிய திருத்துழாய் மயமாய்;
தொழில் - வேலைப்பாடுகளையுடைத்தான;
மாலையும் - பூமாலைகளையும்;
செம் தமிழில் - அழகிய தமிழ்ப் பாஷையிலே;
 

 

விளக்க உரை

உரை:1

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளை யன்றி மற்றொன்றில் ஆதரம் அற்றிருக்கிற எம்பெருமானார் திருவடிகளே நமக்குச் சரணமென்கிறார் இதில் தொண்டரடிப்பொடியாழ்வார் ஸ்ரீரங்கநாதன் திருவடிகளில் இரண்டு மாலைகளைச் செய்து ஸமர்ப்பித்தனரென்று சாடூக்தியாகச் சொல்லுகிறார் அமுதனார். ‘துளபத்தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி” என்றும்’ “தொடையொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றும் தாமே அருளிச் செய்தபடிக்குப் பொருந்தத் திருத்துழாய் மாலைகளையும், திருமாலை திருப்பள்ளியெழுச்சி யென்கிற திவ்ய ப்ரபந்தங்களாகியற சொல்மாலைகளையும் அரங்கத்தையன் கழல்களிலே ஸமர்ப்பித்தவரீறே தொண்டரடிப்பொடியாழ்வார்.

உரை:2

"தனது சீரீய தன்மையால் கட்டப்பட்டதும், தன்னுடைய கரம் பட்டதால் புதுப்பொலிவுடன் விளங்கியதும் ஆகிய திருத்துழாய் மாலைகள்; வேதங்கள் போன்று மூன்று வர்ணத்தினர் மட்டுமே கற்க முடியும் என்ற கட்டுப்பாடு இன்றி, வேதம் ஓத அதிகாரம் இல்லாத பெண்களும்-அறியாமையால் மூழ்கியவர்களும் கற்கலாம்படி தமிழ் மொழியில் உண்டாக்கப்பட்ட வேதம் என்று போற்றப்படும் திருமாலை என்ற திவ்யப் பிரபந்தம் அருளிச் செய்தவர்; ஈறில வண் புகழ் நாரணன் என்று கூறுவதற்கு ஏற்ப , என்றும் உள்ள திருக்கல்யாண குணங்கள் உடையவனாக, தாய் தந்தை இவனே என்று கூறும்படியாக, அனைத்துப் பந்துக்களும் இவனே என்று தோன்றும்படியாக திருவரங்கத்தில் கண்வளர்கின்ற பெரியபெருமாளை, “ஐயனே அரங்கா!”, என்று கூறி அழைத்து நின்றவர்; அந்தத் திருவடிகளைக் காட்டிலும் மேற்பட்ட பொருள் வேறு ஏதும் இல்லை என இருந்தவர் – இப்படிப்பட்டவர் தொண்டரடிப்பொடியாழ்வார் ஆவார். அத்தகைய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருவடிகளைக் காட்டிலும் வேறு ஒரு பொருளை விரும்பாத உத்தமரான எம்பெருமானாரின் திருவடிகள் மட்டுமே எனக்குச் சரணாகும், வேறு ஏதும் இல்லை.மெய்யன் என்று கூறுவதன் பொருள் என்ன? ஸர்வேச்வரனின் திருக்கல்யாண குணங்களை எம்பெருமானார் ஆதிசேஷனாக எப்போதும் அவனுடன் இருந்தபடி அறிந்தவர்; அதனைத் தனது ஸ்ரீபாஷ்யத்தில் உள்ளது உள்ளபடி அருளிச் செய்தார்."

English Translation

Tondaradippodi Alvar made a fragrant garland of Tamil songs of Vedic wisdom and a fresh verdant garland of woven Tulasi leaves worthy of being placed at the feet of the Lord or Arangam. The truthful Ramanjua worshipped the Alvar alone. Ramanjua's feet are my sole refuge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்