விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீரிய நான்மறைச் செம்பொருள்*  செந்தமிழால் அளித்த- 
    பாரியலும் புகழ்*  பாண்பெருமாள்,*  சரணாம் பதுமத்- 
    தாரியல்  சென்னி இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்தம்* 
    காரிய வண்மை,*  என்னால் சொல்லொணாது இக்கடலிடத்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சார்ந்தவர் தம் - ஆச்ரயமாகப் பற்றினவர்களுடைய;
பார் இயலும் புகழ் - பூமியெங்கும் பொருந்தின புகழையுடையவருமான;
பாண் பெருமாள் - திருப்பாணுழ்வாருடைய;
காரியம் வண்மை - அநுஷ்டாநவைலக்ஷண்யமானது;
இக்கடல் இடத்து - கடல்சூழ்ந்த இப்பூமியில்;

விளக்க உரை

உரை:1

எம்பெருமானாடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகளை யெல்லாம் விசதமாகப் பேசுகையாலே சிறந்தவையான நால்வேதங்களில் பொதிந்து கிடக்கும் நற்பொருள்களை “அமலனாதி பிரான்” என்னும் திவ்ய ப்ரபந்தத்தில் சுருக்கி அருளிச் செய்தவராய் நாடெங்கும் பரவின புகழையுடையரான திருப்பாணுழ்வாருடைய சரணுரவிந்தங்களாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை யுடையவரான எம்பெருமானாரை அடிபணிந்தவருடைய ஆசாரவைலக்ஷ்ண்யமானது என் வாய்கொண்டு வருணிக்க முடியாதபடி மிகவும் சிறந்தது என்றாராயிற்று.

உரை:2

"எம்பெருமானின் ஸ்வரூபம் மற்றும் திருக்கல்யாண குணங்களை, உள்ளது உள்ளபடி எடுத்து உரைப்பதால் நான்காக வகைப்பட்ட வேதங்களுக்கு மிகுந்த மேன்மை உள்ளது. ஆழ்ந்த பொருளை உள்ளடக்கிய அவற்றின் ஆழ்பொருளை, அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக இனிய தமிழ் மொழியில் அளித்து, நமக்கு உபகாரம் செய்தவர் திருப்பாணாழ்வார் ஆவார். அகண்ட இந்தப் பூமியில், அதனை விட அகன்ற புகழ் மற்றும் கல்யாண குணங்களைக் கொண்டவரும், பெரியபெருமாள் மகிழும்படியாக இனிதாகப் பாடவல்லவரும் ஆகிய திருப்பாணாழ்வாரின் திருவடிகள் என்ற தாமரை மலர்களைத் தனது திருமுடியில் அலங்காரமாக வைத்துள்ளவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட எம்பெருமானாரைச் சார்ந்தவர்களின் செயல் மேன்மைகள் எப்படிப்பட்டது என்று கடல் சூழ்ந்த இந்தப் பூமியில் உள்ள என் போன்றவர்களால் கூற இயலாது.

காரியவண்மை என்பதைக் கார் + இயல் + வண்மை என்றும் கொள்ளலாம். இதன் பொருள் என்ன? கார் என்றால் கார் காலமேகம், இயல் – அந்த மேகத்தின் தன்மையானது பலன் பாராமல் மழை அளிப்பது, வண்மை – அந்த மேகம் போன்று எம்பெருமானாரின் திருக்குணங்களைப் பொழிகின்ற தன்மை – என்பதாகும்.

இராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம் காரியவண்மை என்றால் என்ன? க்ர்மிகண்டன் என்னும் துர்அரசனின் சபையில் இருந்த குத்ருஷ்டிகளை வாதம் கொண்டு வென்ற கூரத்தாழ்வான்; எம்பெருமானாரின் கட்டளைக்கு இணங்க, மாயாவாதி வித்வான்களைத் தன்னுடைய திருவடிகளின் தீர்த்தம் (ஸ்ரீபாததீர்த்தம்) கொண்டே திருத்திய முதலியாண்டான்; எம்பெருமானாரின் ஆணைக்கு இணங்க திருமலை சென்று, அங்கு திருவேங்கடமுடையானே இவருக்காக மண் சுமந்த மேன்மையுடைய அனந்தாழ்வான் – முதலானவர்களின் மேன்மையை பாசுரங்களால் கூற இயலுமோ?"

English Translation

Tiruppanalvar rendered the essence of the Vedas in Sweet Tamil songs. Ramanuja always wore the Alvar's feet-lotus as a garland on himself. Those who take refuge in Ramanuja display such excellence as I cannot describe in this wide world.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்