விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இயலும் பொருளும் இசையத் தொடுத்து,*  ஈன் கவிகள் அன்பால்-
    மயல்கொண்டு வாழ்த்தும் இராமானுசனை,*  மதியின்மையால்- 
    பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவிநெஞ்சால்* 
    முயல்கின்றனன்*  அவன்தன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஈன் கவிகள் - விலக்ஷணரான கவிகள்;
அன் பால் - ப்ரீதியினாலே;
இயலும் பொருளும் - சப்தமும் அர்த்தமும்;
இசைய - நன்கு பொருள் தும்படியாக;
தொடுத்து - கவனம் பண்ணி பாடல்களிலே;

விளக்க உரை

உரை:1

“பக்தியேய்ந்த வியல்விதென்றே” என்று கீழ்ப்பாட்டிற் சொன்னவிவர், அப்படிப்பட்ட பக்தி தமக்கு உண்டோவென்று பார்த்தார், ‘அந்தோ! நாமோ அவ்வெம்பெரு மானாரைத் துதிக்க இழிந்தது! என்று தம்மைத்தாமே வெறுத்துக் கொள்ளுகிறார் இதில் - இன்கவி பாடும் பரமகவிகளான சில மஹான்கள் சொல்லின்பமும் பொருளின்பமும் நன்கு பொருந்துமாறு கவி பண்ணி ஆந்தரமான அன்பினாலே வ்யாமோஹித்து இராமாநுசனை வாழ்த்தா நிற்பர்கள்; அன்னவர்களுடைய பக்திபரீவாஹ ரூபமான கவிகளில் ஆதரமற்ற எனதுபாவி நெஞ்சால் அவ்விராமாநுசனுடைய பெருப்பெருத்த புகழ்களை யெல்லாம் பேசுவதாக நான்முயல்கின்றேனே! இஃது என்ன புத்திகெட்ட தன்மை! என்று வெறுத்துக்கொள்ளுகிறார்.

உரை:2

"கூரத்தாழ்வான், பராசரபட்டர் போன்ற சிறந்த வல்லுனர்கள் எம்பெருமானார் மீது கொண்ட அன்பு மயக்கமாக மாறியது; இதனால் அவர்கள் அவரை வாழ்த்திப் பலவாறு கவிதைகள் புனைந்தனர். அவற்றில் சொல், பொருள் போன்ற அனைத்தும் மிகவும் பொருந்தி நிற்கின்றன. இவர்கள் பின்வருமாறு வாழ்த்தினர்:

* வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை.
* அறுசமயச் செடி அதனை அடியறுத்தான் வாழியே
* அறமிகு நல்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே அழகாரும் எதிராசன் இணையடிகள் வாழியே
* சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி … இனி திருப்போடெழில் ஞானமுத்திரை வாழி
*  வாழியரோ தக்கோர் பரவுந் தடஞ்சூழ் பெரும்பூதுர் முக்கோல் பிடித்த முனி
இது போன்ற காவியங்களில் நான் எனது மனதை வைத்து, அவற்றை அனுபவித்தபடி எனது பொழுதைப் போக்குவது அல்லவோ சிறந்தது? ஆனால் நான் செய்வது என்ன? அந்தக் காவியங்களில் பக்தி வைக்காமல், மிகவும் பாவம் செய்த நான் செய்யத் துணிந்தது என்ன? பாவம் நிறைந்த எனது சொற்கள் கொண்டு, “இதுவே இராமானுசனின் புகழ்”, என்று வரையறுத்துக் கூற இயலாத அவரது புகழை, முழுமையாகக் கூற முயன்றேனே! இது எனது அறிவுக் கேட்டால் விளைந்தது அல்லவோ?"

English Translation

Sweet poets with love in their hearts lose themselves praising Raamanjua, blending proper words and meaning, Alas! endowed with a devotion sinful heart, I too am trying to speak of his glory,-it is sheer madness!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்