விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நம்பி பிம்பிஎன்று*  நாட்டு மானிடப் பேர்இட்டால்* 
    நம்பும் பிம்பும்எல்லாம்*  நாலுநாளில் அழுங்கிப்போம்*
    செம்பெருந்தாமரைக் கண்ணன்*  பேர்இட்டுஅழைத்தக்கால்* 
    நம்பிகாள் நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் பெருதாமரை - சிவந்தும் பெருத்துமிருக்கிற தாமரைப்பூப் போன்ற
கண்ணன் - திருக்கண்களையுடைய எம்பெருமானுடைய
பேர் இட்டு - திருநாமத்தை இட்டு
அழைத்துக் கால் - அழைத்தால்
நம்பிகான் - (அறிவினால்) குறைவற்றவர்களே!

விளக்க உரை

நம்பி என்னுஞ்சொல், ‘குறைவற்றவன்’ என்னும் பொருளையுடையதாதல்பற்றி, ‘இப்பெயரை நமது பிள்ளைக்கு இட்டால் ஒரு குறைவுமின்றிப் பூர்ணனாயிருப்பன்’ என நினைத்து அப்பெயரை இடுகிறவர்களைக் குறித்து ஏசுகிறார் இப்பாட்டில். பிம்பி என்பதற்கு (இங்கு) ஒரு பொருளுமில்லை. இச்சொல் எப்படி பொருளற்றதோ. அப்படியேதான் நீங்கள் விரும்பியிடுகிற நம்பி என்கிற சொல்லும் பொருளற்றது என்று க்ஷேபிக்கிறபடியாய், தம்பிக்கு எதிர்த்தட்டாக ஒரு பிம்பியை அருளிச் செய்கிறாரென்க இங்ஙனே வெறுப்புத் தோற்றச் சொல்லுமிடங்களிலெங்கும் கூட மற்றொருசொல் பொருளின்றி வழங்கப்படுவது உலகவியற்கை; (உதாரணம்;) உப்புள்ளதோ?’ என்று ஒருவனைக் கேட்டால், அதற்கு அவன் வெறுப்புக்கொண்ட காலத்தில் “உப்புமில்லை, பப்புமில்லை” என்று கூறுவான்; அதுபோலவே, இலகும் நம்பி என்னும்பெயரில் வெறுப்புக்கொண்ட ஆழ்வார், பிம்பி என்ற மற்றொரு பொருளில்லாப் பெயரைக் கூடவினைத்துக் கூறுகின்றார். நெடுங்காலங் குறைவற்று வாழவேணுமென்னும் விருப்பத்தினால், நம்பி, பிம்பி, என்றாற்போலச் சிலநாட்டு மானிடப்பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு இட்டால், இதனால் அவர்கள் தங்கள் வாழ்நாளுள்ளளவும் குறையொன்றுமின்றி இருப்பார்கள் என்கிற எண்ணம் தமது மூடத்தனத்தினால் உண்டாவதேயாம்: “வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென்பதில்லை” என்று ஆழ்வாரருளிச் செயலின்படியே அந்த வாழ்த்திநாலுநாளில் கெட்டுப்போம் என்கிறார்.

English Translation

O People! You give mortal’s names like Nambi and Pimbi, in four days their freshness will fade away. Call your children by the lotus-eyed Lord’s names; Narayana’s own mother can never go to Hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்