விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மலமுடை ஊத்தையில் தோன்றிற்று*  ஓர் மல ஊத்தையை* 
    மலமுடை ஊத்தையின் பேர்இட்டால்*  மறுமைக்குஇல்லை*
    குலமுடைக் கோவிந்தா!*  கோவிந்தா! என்று அழைத்தக்கால்* 
    நலமுடை நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறுமைக்கு - அத்ருஷ்ட பலத்துக்கு
இல்லை - ஒருவழியு மில்லையாம்:
குலம் உடை - நற்குலத்திற் பிறந்த
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக் கால் - கோவிந்தனே! கோவிந்தனே! என்று (பகவந்நாமத்தையிட்டு) அழைத்தால்.
ஸத்தையின் - ஹேயமுமான சரீரத்தையுடைய மற்றொரு ஐந்துவினுடைய
இட்டால் - இட்டு அழைத்தால், நலம் உடை

விளக்க உரை

தீண்டாவழும்புஞ் செந்நீருஞ் சீயுநரம்புஞ் செறிதசையும் வேண்டா நாற்றம் மிருமுடல்” என்றபடி மாம்ஸரத்தம் முதலிய மலங்களோடு கூட ஹேயமாயிருக்கிற மாதாபித்ரு சரீரத்தினின்று தோன்றினதாயும், ‘காரண....... துவுகங்கிணங்கவே காரியஸ்து பிறக்கும்’ என்ற நீதியின்படி, மாதாபிதாக்களுடைய சுக்ல கோணிதங்களாலே பரிணதமாகையாலே தத்ஸ்வரூபமாகவேயிருக்கிற சரீரத்தோடே கூடினதாயு மிருக்கிற ஜந்துவைக், கீழ்ச்சொன்னபடியே மிகவும் ஹேயமாயிருந்துள்ள சரீரத்தைப் பூண்டு கொண்டிருக்கிற ஒரு .... ஜந்துவின் பெயரையிட்டழைத்தால், இம்மையிற் சில பயன் பெறி... ஆமுஷ்மிகத்தில் ஒருபயனும் பெறமுடியாது என்பது முன்னடிகளின் கருத்து. மூன்றாமடியில், குலம்- இடைக்குலம்

English Translation

A filth-ridden body born in a filth-ridden body and given a filth-ridden body’s name is of no use hereafter. Call him by the exalted name “Govinda, O, Govinda!” The good Lord Narayana’s own mother can never go to Hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்