விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மானிட சாதியில் தோன்றிற்று*  ஓர் மானிடசாதியை* 
    மானிட சாதியின் பேர்இட்டால்*  மறுமைக்குஇல்லை*
    வானுடை மாதவா!*  கோவிந்தா! என்று அழைத்தக்கால்* 
    நானுடை நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறுமைக்கு இல்லை - அத்ருஷ்டபலம் (மோஷம்) பெறுகைக்கு யாதொரு வழியுமில்லையாம்,
வான் உடை - பரமபதத்தை (விபூதியா) உடைய
மாதவா - ச்ரியபதியே
கோவிந்தா - கோவிந்தனே!
என்று அழைத்தக் கால் - என்று (எம்பெருமான் திருநாமத்தையிட்டு) அழைத்தால்,

விளக்க உரை

ஜீவாத்துமா, கருமங்களுக்கிணங்கத் தேவயோகி முதலிய பல யோகிகள் தோறும் பிறக்கக்கடவன் ஆகையாலே புண்ணிய பாபங்களிரண்டையும் அநுபவித்தற்கும் ஸம்பாதிப்பதற்கும் உறுப்பாகவன்றோ மநுஷ்ய ஜாதியிற் பிறக்கும் பிராணியை, ஐஹிகமானதொரு பயனை விரும்பிக் கர்மவச்யமான மநுஷ்ய ஜாதியில் ஒன்றின் பெயரை யிட்டழைத்தால், இஹலோகத்திற் சில க்ஷுத்ர பலன்கள் கிடைக்கிலும் பரலோகப் பேற்றுக்கு யாதொரு வழியில்லையாம்; இங்ஙனன்றி, எம்பெருமாள் திருநாமத்தைக் யிட்டழைத்தால் அப்பேறு பெறக் குறையில்லை யென்றவாறு மறுமை- ஆமுஷ்மிகம்; (இம்மை- ஐக்ஷிகம்) என்னுடை - என்னவேண்டுமிடத்து, “நானுடை” என்றது, “மானிட சாதியில்” என்றெடுத்த முறைக்குக் சேரவேண்டுகையால்; எனவே எதுகை நோக்கிய தென்றபடி: திருமங்கையாழ்வாரும் பெரிய திருமொழியில் “ஊனுடைச் சுவர் வைத்து” என்ற பாட்டின் ஈற்றடியில், எதுகைக்கு ***- கானுடைத் தவத்தால்” என்றருளிச் செய்துள்ளமை காண்க.

English Translation

A mortal child born to a mortal mother and called by a mortal name is no means of liberation. Call him by the names of Govinda, Vaikunta, Madhava, and such. My Narayana’s own mother can never go to Hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்