விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூடிக்கூடி உற்றார்கள் இருந்து*  குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து* 
    பாடிப்பாடி ஓர் பாடையில்இட்டு*  நரிப்படைக்கு ஒரு பாகுடம்போலே*
    கோடி மூடிஎடுப்பதன் முன்னம்*  கௌத்துவம்உடைக் கோவிந்தனோடு* 
    கூடிஆடிய உள்ளத்தர்ஆனால்*  குறிப்பிடம் கடந்து உய்யலும்ஆமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நற்றங்கள் - (சிறிது) நன்மையாகத் தோன்றும்படியான கூற்றை
பறைந்து - சொல்லி,
பாடிப் பாடி - (அழுகைப்பாட்டுக்களைப்) பலகால் பாடி
ஓர் பாடையில் இட்டு - ஒரு பாடையிலே படுக்கவைத்து
கோடி மூடி - வஸ்திரத்தையிட்டு மூடி

விளக்க உரை

குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து - துஷ்கர்மாக்கள் எத்தனை செய்யப்பட்டிருந்தாலும், அவற்றிலொன்றையுஞ் சொல்லமாட்டார்கள்; ஸத்கர்மம் ஒன்று செய்யப்பட்டிருப்பினும், அதனைப் பலவாகப்பன்னிப் பகர்வர் என்க. (நரிப் படைக்கொரு பாகுடம்போலே.) வீட்டிலிருந்து பாடையை மூடிக்கொண்டு போவதைப்பார்த்தால், சுடுகாட்டிலுள்ள நரிப்படைகளுக்கு உணவாம்படி பாகுக்குடங்கொண்டு போகிறார்களோ என்று நினைக்கும்படியாயிருக்குமென்க; அன்றி, ‘யமலோகத்திற் பாபிஷ்டர்களை நலிவதற்கென்று ஏற்படுத்தப்பட்டுள்ள நரிப்படைகளுக்குப் பாகுக்குடம் கொண்டுபோவதுபோல’ என்றும் உரைக்கலாமென்பர் சிலர்; பாகு - குடம், பாகுடம், தொகுத்தல் விகாரம்: “ஒண்சங்கதை” போல. இனி, பாகுடம் என்கிறவிது- “***” என்ற வடசொல்லின் விகாரமென்றுங்கொள்ளலாம்; அப்போது, நரிப்படைகளுக்குப் பாத காணிக்கை கொண்டுபோவதுபோல என்பது பொருள்; ***- பாத காணிக்கை; “***” என்று தயாசதகத்தில் தூப்புல்பிள்ளை அருளிச்செய்தமைகாண்க. கௌத்துவம் - ***- குறிப்பிடம்- பாவங்களின் பயனை அநுபவிப்பதற்கென்று குறிக்கப்பட்ட இடம்; எனவே, யமலோகமாயிற்று. கடத்தல் - அங்குச்செல்லாதொழிதல்.

English Translation

Relatives will gather, sing dirges extolling virtues and ignoring vices, then place you in a pitcher, cover you with a shroud and take you away as meal for the foxes. Before that happens, if the heart joins the mirthful Govinda in singing and dancing, it is possible to escape the burial ground and become free.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்