விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மடிவழி வந்து நீர்புலன்சோர*  வாயில்அட்டிய கஞ்சியும் மீண்டே* 
    கடைவழிவாரக் கண்டம்அடைப்பக்*  கண்உறக்கமது ஆவதன்முன்னம்*
    தொடைவழி உம்மை நாய்கள்கவரா*  சூலத்தால் உம்மைப் பாய்வதும்செய்யார்* 
    இடைவழியில் நீர் கூறையும் இழவீர்*  இருடீகேசன் என்று ஏத்தவல்லீரே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மடி புலன் வழி வந்து - லிங்கத்தின் வழியாக வந்து
நீர் சோர - மூத்திரநீர் பெருகவும்
வாயில் - வாயிலே
அட்டிய - பெய்த
கஞ்சியும் - பொரிக்கஞ்சியும்

விளக்க உரை

மரணகாலம் கிட்டும்போது, கண்டவிடமெங்கும் யமகிங்கரர்கள் தென்படுவதாக நினைத்து, அதனாலுண்டான அச்சத்தினால் கிடந்தபடியே மூத்திரம்விட்டுக்கொள்ளுவார்கள்; வாயில்விட்ட பொரிக்கஞ்சி உன் இழியமாட்டாது கழுத்தையடைத்துக் கடைவாய்வழியாகப் பெருகும்; இப்படிப்பட்ட அவஸ்தைகள் பட்டுக்கொண்டு கிடக்கும்போதே, எம்பெருமான் பேர்சொல்லக் காலம் வாய்க்காது மாளப்பெற்றால், யமலோகம் போகநேர்ந்து, வழியிடையிற் செந்நாய்களால் துடை கவ்வப்பட்டும், யமகிங்காரர்களினால் சூலங்கொண்டு குத்தபபட்டும், அரையிற் கூறையை இழக்கப்பெற்றும், இப்படி பல துன்பங்கள் படவேண்டி வருமாதலால், அவற்றுக்கொல்லம் இடமறும்படி முந்துறமுன்னமே எம்பெருமாளை ஏத்தப்பெறில் இடர்பாடு ஒன்றும் படநேராது என்கிறார். மடிப்புலன் என்று - ஆண்குறியைக் குறித்தவாறு - அச்சத்தினால் மூத்திரம் விட்டுக்கொள்ளுதல் அனைவர்க்கும் அநுபவத்திற்கண்டதாகும். கண்டம் - ***. கவரா - பலவின்பாரெதிர்மறைவினைமுற்று. சூலம் -ஈட்டி கூறையிழத்தல் என்பது - யாம்ப யாதகைகளில் ஒன்றாம். “இருடீகேசனென்றேத்தவல்லீரேல்” என்ற சிலர்க்குப் பாடமாம்.

English Translation

The bladder will overflow spilling urine, gruel poured into the mouth will be blocked in the throat and flow down the cheek, and the eyelids will close. Before that happens, if you can praise the Lord Hrishikesa, controller of the senses, Yama’s hounds will not tear into your thighs, his agents will not pierce you with their spears, and you will not lose your clothes on the way.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்