விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து*  மேல்மிடற்றினை உள்எழவாங்கிக்* 
    காலும் கையும் விதிர்விதிர்த்துஏறிக்*  கண்உறக்கமது ஆவதன்முன்னம்*
    மூலம்ஆகிய ஒற்றைஎழுத்தை*  மூன்றுமாத்திரை உள்ளெழவாங்கி* 
    வேலைவண்ணனை மேவுதிர்ஆகில்*  விண்ணகத்தினில் மேவலும்மாமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மேல் எழுந்தது ஓர் வாயு - ஊர்த்துவச்லாஸமானது
கிளர்ந்து - மேலெழுந்ததனால்
மேல் மிடறு - நெஞ்சானது
உள் எழ வாங்கி - கீழே இடிந்து விழப்பெற்று
காலும் கையும் - கால்களும் கைகளும்

விளக்க உரை

உயிர் உடலைவிட்டு நீங்குவதற்குப் பூர்வக்ஷணத்திற் பிறக்கும் விகாரங்கள், ஒன்றரையடிகளாற் கூறப்படுகின்றன; அவையாவன - மேல்முகமாக - வாஸம் (மூச்சுக்) கிளம்புதலும் நெஞ்ச இடிந்து விழுதலும், கைகால்கள் பதைபதைத்தலுமாம். இப்படிப்பட்ட விகாரங்களையடைந்து மாளுவதற்கு முன்னமே, ஸகலவேதாஸாரமாகிய ஓம் என்னும் பிரணவத்தை உச்சரிக்கவேண்டிய முறைவழுவாது உச்சரித்து எம்பெருமானை இறைஞ்சினால். களிப்புங் கவர்வுமற்றுப் பிறப்பும் பிணியும் பிறப்பற்று, ஒளிக்கொண்ட சோதியுமாய் அடியார்கள் குழாங்களை உடன்கூடப் பெறலாமென்கிறார். “மேலெழுவதோர்வாயு” என்னவேண்டுமிடத்து, “மேலெழுந்ததோர் வாயு” என்றது - வழக்குபற்றிய வழுவமைதியாம். “மேல்மிடற்றினை” என்றவிடத்து, இன், ஐ-அசைச்சொற்கள்: அன்றி, உருபுமயக்கமுமாம். விதிர் விதிர்த்தல்- ‘படபட’ என்று துடித்தல்: (மூலமாகிய இத்யாதி.) (யமகிங்கார்களைக் கண்ட பயத்தினால்) பிரணவத்திற்கு ஒருமாத்திரையும் உண்டு, இரண்டு மாத்திரையும் உண்டு, மூன்று மாத்திரையும் ஒரு மாத்திரையும் உண்டு, இரண்டு மாத்திரைம் உண்டு, மூன்றுமாத்திரையும் ஒரு உண்டு ஒன்று இரண்டு மாத்திரைகளைடையதாகப் பிரணவத்தை உச்சரிக்குமவர்களுக்கு க்ஷுத்ரபலப்ராப்தியுள்ளது; அதனை மூன்றுமாத்திரையுள் ளெழவாங்கும் அவர்களுக்கே பரமதப்ராப்தி யுண்டு என்பதை ஸ்ரீபாஷ்யத்தில் ஈக்ஷதிகர்மாதி கரணத்தில் தெளியக் காணலாம்:

English Translation

With every inhaling breath, the chest will drop, the limbs will tremble, the eyes will Roll and close. Before that happens, take three draughts of the single syllable Mantra (OM) and contemplate the ocean-hued Lord. Those who can will attain Paramapadam, the highest state.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்