விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நளிர்ந்தசீலன்நயாசலன்*  அபிமானதுங்கனை*  நாள்தொறும்- 
    தெளிந்தசெல்வனைச்*  சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்க்*
    குளிர்ந்துஉறைகின்றகோவிந்தன்*  குணம்பாடுவார்உள்ளநாட்டினுள்* 
    விளைந்ததானியமும் இராக்கதர்*  மீதுகொள்ளகிலார்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குளிர்ந்து உறைகின்ற - திருவுள்ளமுகந்து எழும் தருளி யிருப்பவனான எம்பெருமானுடைய திருக்
கோவிந்தன் குணம் படுவார் - கல்யாண குணங்களைப் பாடுமவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும் - எழுந்தருளியிருக்கிற நாட்டிலே விளைந்த தாந்யத்தையும்
இராக்கதர் - ராக்ஷஸர்கள்
மீது கொள்ள கிலார்கள் - அபஹரிக்க மாட்டார்கள்

விளக்க உரை

“அவ்வமுக் கொன்றுமில்லா அணி கோட்டியர்கோன் அபிமானதுங்கள், செல்வனைப்போலத் திருமாலே நானுமுனைக்குப்பழவடியேன்” என்ற அருளிச்செயல் இங்கு உணரத்தக்கது. நயாவலன் - வடசொல் தொடர்; நுயெ *** நீதிநெறியில் சலிப்பற்றவன். *** - ஸாத்விகாஹங்காரத்தாற் சிறந்தவன். சிறந்தகுணகணங்க ளமைந்த செல்வநம்பிக்யை அடிமை கொண்டருளின திருக்கோட்டியூ ரெம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை வாயாரப் பாடும் ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளியிருக்கும் நாட்டில் விளையும் தாக்யங்களைக் கூட ராக்ஷஸர் அபஹரிக்கவல்லரல்லர்; தமக்கும் தம் பந்துக்களுக்குமாகச் சேமித்த தாந்யமாகிலன்றோ ராக்ஷஸர் அபஹரிக்கலாவது என்பது உள்ளுறை. தானியம் - ***ம். தானியமும் என்ற உம்மை - இழிவுசிறப்பும்மை; வருத்தமின்றிக் கொள்ளைகொள்ளுகைக்குப் பாங்காக வயல்களில் விளைந்துள்ள தாந்யத்தையே கொள்ளைகொள்ளமாட்டாத அரக்கர், மற்றவற்றைக் கொள்ளையிட எங்ஙனே வல்லவராவர்? என்பது ஆராயத்தக்கது.

English Translation

The red-eyed-Lord Senkanmal of Tirukkottiyur engage the genteel, just and respectable Selvanambi in his service; he lives amidst devotees who sing Govinda’s names. Even Rakshasas will not steal their paddy.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்