விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூதம்ஐந்தொடு வேள்விஐந்து*  புலன்கள்ஐந்துபொறிகளால்* 
    ஏதம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*
    நாதனை நரசிங்கனை*  நவின்றுஏத்துவார்கள்உழக்கிய* 
    பாததூளிபடுதலால்*  இவ்உலகம்பாக்கியம்செய்ததே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூதம் ஐந்தொடு - பஞ்சபூதமாகிய சரீரத்தினாலும்
ஐந்து வேள்வி - பஞ்சமஹாயஜ்ஞங்களினாலும்
ஐந்து புலன்கள் - (சப்தம் முதலி) ஐந்து விஷயங்களினாலும்
(ஐந்து) பொறிகளால் - பஞ்சேந்திரியங்களினாலும் (ஸம்பவிக்கக்கூடிய)
ரதம் ஒன்றும் இலாத - குற்றமொன்றுமில்லாதவர்களும்

விளக்க உரை

ஒரு வகைக்குற்றமும் தம்மிடத்து இல்லாத பரமோதாரர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழுமிடமான திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும் எம்பெருமான்பக்கம் அன்புபூண்ட பாகவதர்கள் பலர் இவ்வுலகத்தில் ஸஞ்சரியா நின்றமையால், அவர்களுடைய ஸ்ரீபாததூளியை வஹிக்கப்பெற்ற இவ்வுலகம் பெருப்பெருத்த பாக்கியம் பண்ணிவைத்ததென்கிறார். நிலம், நீர், தீ. கால், விசும்பு என்கிற பஞ்சபூதமயமாகிய சரீரத்தை பூதமைத்து என்றது. - ஆகுபெயரால். “மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவு மாதர் சமூமாம், புண்ணாராகக்கை” என்ற பெரியதிருமொழி அறிக. வேள்வி ஐந்து தேவயஜ்ஞம், பிரத்ருயஜ்ஞம் பூதயஜ்ஞம், மனுஷயஜ்ஞம், ப்ரஹமயஜ்ஞம் என்பவை புலன்கள்- ஐந்து - சப்தம். கந்தம், ரூபம், ... ஸ்பாசம் என்பதை பொறிகள் ஐந்து செவி, வாய், கண், மூக்கு, உடல், இனி “செவி வாய் கண் மூக்கு உடலென்றைம்புலனும்” என்றருளிச் செய்துள்ளமைக் கிணங்க ஐம் புலன்கள் என்பதற்கு. செவி முதலிய பஞ்ச இந்திரியங்கள் என்று பொருளுரைத்தலும் ஒக்கும். “பொங்கைம்புலனும் பொறிவைத்து, “சருமேந்திரியம்” என்ற திருவாய்மொழியின் வியாக்கியாகங்களைக் காண்க. இனி இவற்றால் ஏதமொன்றுமிலாமையாவது தேஹத்தைக் கணக்கில் சேஷமாக்கிக் கொள்ளுகை சரீரத்திலுண்டாகும் ஏதம். அதை எம்பெருமானுக்குச் சேஷப்படுத்துகை - ஏதுமில்லை; அதை எம்பெருமா னடியார்களுக்குச் சேஷப்படுத்துகை ஏதமொன்றுமில்லாமை பஞ்சமஹாயஜ்ஞங்களை ஸ்வர்க்கம் முதலிய உலகங்களைப் பெறுதற்கு ஸாதகமாக அநுஷ்டித்தல், ஏதமில்லாமை; பகவானுடையவும், பாகவதர்களுடையவும் முகமலர்த்திக்கென்று அநுஷ்டித்தல் ஏதமொன்றுமிலாமை. ரூபம், ரஸம், கந்தம், ஸ்பர்சம், சப்தம் ஆகிற விஷயங்களைத் தனக்கு என்றிருக்கை- ஐம்புலன்களால் வரும் ஏதம்; இவற்றைப் பகவத் விஷயத்துக்கென்றிருக்கை- ஏதமிலாமை! பாகவத விஷயத்துக்கென்றிருக்கை- ஏதமொன்றுமில்லை. கண் முதலிய இந்திரியங்களை விஷயாந்தரங்களிற் செலுத்துகை- ஐம்பொறிகளால் வரும் ஏதம்; அவற்றை எம்பெருமான் விஷயத்திற் செலுத்துகை- ஏதலமிலாமை; பாகவதவிஷயத்தில் செலுத்துகை- ஏதமொன்றுமிலாமை. எனவே, திருக்கோட்டியூரிலுளள் ஸ்ரீவைஷ்ணவர்கள், தங்கள் தேஹத்தைப் பாகவதவிஷயத்தில் ஆட்படுத்துமவர்கள் என்றும், பகவத் பாகவதர்களின் முகமலர்த்திக்காகப் பஞ்சயஜ்ஞாதுஷ்டாகத்தில் பண்ணுமவர்கள் என்றும், பஞ்சுஜ்ஞாகேந்திரியங்களையும் பாகவதவிஷயத்தில் உபயோகப்படுத்துமவர்கள் என்றும் கூறியவாறு, நாதனை என்று திருக்கோட்டியூரில் கோயில் கொண்டிருக்கும் சொக்க நாராயணரைக் குறிக்கிறதென்றும், நரசிங்கனை என்று தெக்காழ்வாரை குறிக்கிறதென்றும் ஸம்ப்ரதாயம்.

English Translation

The Lord resides in Tirukkottiyur with generous people who are without a fault in their relation to the five elements, the five sacrifices, the five sense organs and the five sensory impulses. They praise Narasimha through chants. By the touch of the dust on their feet, this Earth mundane has become a sanctified place.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்