விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி*  நிழல்எழும்- 
    திண்ணைசூழ்*  திருக்கோட்டியூர்த்*  திருமாலவன்திருநாமங்கள்*
    எண்ணக்கண்டவிரல்களால்*  இறைப்போதும்எண்ணகிலாதுபோய்* 
    உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்*  கவளம்உந்துகின்றார்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல்வண்ணம் - நல்ல நிறத்தையுடைய
மணியும் - ரத்நங்களையும்
மாதகமும் - மாதகங்களையும்
அழுத்தி - (ஒழுங்குபட) இழைத்ததனால்
கிழல் எழும் - ஒளிவிடா நின்றுள்ள
 

விளக்க உரை

உலகத்தில் மனிதர்கட்குக் கை, வாய் முதலிய அங்கங்களைப் படைத்தது, அவற்றைப் பகவத் விஷயத்திலே உபயோகப்படுத்துவதற்காகவேயாம், அதற்கிணங்கக் கை விரல்களால் திருகோட்டியூரெம்பெருமானுடை திருநாமங்களை என்ணுகையும், வாயினால் அவற்றைச் சொல்லுகையி மேயாயிற்றுத் தகுவது!: இப்படியிருக்க சிலபாவிகள் அக்காரியங்களிலே அக்கரணங்களைச் செலுத்தாது, வாயினால் தின்னவேண்டிய தென்றும், கை விரல்களினால் சோற்றுக்கபளங்களை யெடுத்து அவ்வாயினுள் விடவேனுமென்றும் இவ்வளவே தமக்குக் காரியமாக ஏற்படுத்திக் கொண்டன? ஈதென்ன கொடுமை! என்று உள்வெதும்புகின்றனர். ஒரு காலாகிலும் அக்காணரங்களைக் கிரமமான விஷயத்தில் உபயோகித்தால் குறையறும், அதுவுமில்லையென்பார், இறைப்பொழுதும் என்கிறார். கவளம் - ***-“

English Translation

The Lord of Sri resides in Tirukkottiyur surrounded by mansions with gem-studded porticos that cast shadows by the light of their brilliance. These fingers were made for counting his names. They, who do not realize this even for a fleeting moment, know to use them for pushing food down their unwashed gluttonous mouths, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்