விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து*  அரக்கர்தங்கள்- 
    இனம்கழுஏற்றுவித்த*  ஏழிற்தோள்எம்இராமன்மலை*
    கனம்கொழிதெள்அருவி*  வந்துசூழ்ந்துஅகல்ஞாலம்எல்லாம்* 
    இனம்குழுஆடும்மலை*  எழில்மாலிருஞ்சோலையதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கனம் - ஸ்வர்ணமயமான
குழையான் பொருட்டா - காதணியை யுடையாளான
கணை - அம்புகளை
பாரித்து - பிரயோகித்து
அரக்கர்கள் இனம் - ராஷஸ குலத்தை

விளக்க உரை

இராமபிரான், பிராட்டியை லங்கையினின்றும் மீட்டுக்கொணர்கைக்காக, சரவணன் முதலிய சாக்ஷஸர்களின் மேல் அம்புகளைச் செலுத்தி, அவர்களை முடித்தமையைக் கூறுவன. முன்னடிகள். கனம்- சுநககூ. என்ற வடசொற்சிதைவு கனங்குழையாள் என்றது- பிராட்டியின் முன்புற்ற நிலைமை பற்றி. பாரித்தல்- பரப்புதல், கழுவேற்றுவித்தல்- சூலாரோஹணஞ் செய்வித்தல்; தூக்கிலேற்றி உயிரை முடித்தல்; இதனால், கொன்றபடியைக் கூறியவாறு, அன்றி, கழு ஏற்றுவித்த- கழு என்னும் பறவைகள் ஏறி ஜீவிக்கும்படி பண்ணின என்று முரைக்கலாம்; இதனால், அரக்கர்களைப் பிணமாக்கின படியைக் கூறியவாறு; பிணங்கள் கழுகுககளுக்கு உணவாகுமன்றோ. பின்னடிகளின் கருத்து- திருமலையிலுள்ள நீரருவிகள் பொன்களைக் கொழித்துக்கொண்டு பெருகாநிற்க, அவற்றிலே லோகமெல்லாம் திரண்டுவந்து நீராடுகிறபடியைக் கூறியவாறாம். இனம் எனினும், குழு எனினும், திரளுக்கே பெயர்

English Translation

For the sake of gold-jeweled Sita, my Lord Rama rained arrows and destroyed the Rakshasa clan. His hill abode is Malirumsolai, where pure streams flow heaping gold and where the whole world comes together in pilgrimage to take a holy dip.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்