விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நல் நலத் தோழிமீர்காள்!*  நல்ல அந்தணர் வேள்விப் புகை* 
    மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்*  தண் திருவல்லவாழ்* 
    கன்னல் அம் கட்டி தன்னை*  கனியை இன் அமுதம் தன்னை* 
    என் நலம் கொள் சுடரை*  என்றுகொல் கண்கள் காண்பதுவே?*   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல் நலம் தோழியீர்காள் - சிறந்த நேசமுள்ள தோழிகளே!
நல்ல அந்தணர் வேள்ளி புகை - வைதிக ப்ரஹ்மணர்கள் செய்யும் யாகங்களிலுண்டான புகை
மை நலம் கொண்டு - ஸமயீனுடைய நல்ல நிறத்தைக்கொண்டு
உயர் விண் மறைக்கும் - உயர்ந்த ஆகாசத்தை மறைக்குமிடமான
தண் திருவல்லவாழ் - குளிர்ந்த திருவல்லவாழிலே எழுந்தருளியிருப்பவனும்

விளக்க உரை

(நன்னலத் தோழியீர்காள்.) தோழிகளே! உங்கள் குணங்கண்டன்றோ நான் உங்களோடு பழகியிருப்பது; நீங்கள் நன்னல தோழிகளல்வீரோ? தாய்மார் போலவே நீங்களும் எனக்குப் பகையாளிகளாக இருந்திகோலாகில் உங்களுக்குத் தோழிமாரென்னும் பெயர் அடுக்குமோ? திருவல்லவாழில் நல்லவந்தணர்கள் பகவத்ஸமாராதனமாக அனுஷ்ட்டிக்கும் வேள்விகளில் தோன்றும் புகையானது ஆகாசப்பரப்பெங்கும் பரவியிருந்து என்னை யீர்க்கின்றது; இது ஒருபுறமிருக்க, அத்தலத்தெம்பெருமானடைய அளவுகடந்த யோக்யதையோ என்னை ஆத்மாபஹாரம் பண்ணாநின்றது; அந்தத் திருமூர்த்தியைக் கண்ணால் காணப்பெற்றால் போதுமென்றிருக்கிற வெனக்கு அது என்னைக்குக் கைகூடும்? சொல்லுங்கோளென்கிறாள்

English Translation

O Good-natured sakhis! The smoke from the good Vedic seers' sacrifices clouds the sky in Tiruvallaval, Our Lord, -that sweet ambrosia, that fruit, that sugar-candy, -has stolen my well-being. Alas! When will my eyes see his radiant form?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்