விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சூடு மலர்க்குழலீர்!*  துயராட்டியேன் மெலிய* 
    பாடும் நல் வேத ஒலி*  பரவைத் திரை போல் முழங்க* 
    மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்*  தண் திருவல்லவாழ்* 
    நீடு உறைகின்ற பிரான்*  கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலர் சூடும் குழலீர் - பூக்களணிந்த கூந்தலையுடைய மாதர்களே!
துயராட்டியேன் மெலிய - துக்கங்களை யனுபவிக்கின்ற நான் இளைக்கும்படியாக
பாடுநல்வேதம் ஒலி - பாடப்படுகின்ற ஸாமவேத கோஷமானது
பரவை திரைபோல் முழங்க-கடலின் அலைக்கிளர்ச்சி பொல் முழங்கா நிற்க.
மாடு உயர்ந்து - பக்கங்களிலே ஓங்கி

விளக்க உரை

(குடுமலர்க்குழலீர்.) “எம்மை நீர் நலிந்தென் செய்திரோ” என்னும் வாக்கியம் கீழ்ப்பாட்டிலும் மேற்பாட்டிலும் இருப்பதனாலே இப்பாட்டிலும் அது அநுஷங்கம் செய்துகொள்ள (கூட்டிக்கொள்ள) உரியது. தோழிகாள்! நீங்கள் உங்களுக்கு அபிமதமானதைச் சூடிக்கொண்டு வாழ்வதுபோல யானும் எனக்கு அபிமதமானதைச் சூடிக்கொண்டு வாழ நினைத்தால் இதில் என்ன பிசகு? இதற்காக என்னை நீங்கள் கண்டிப்பது ஏன்? என்ன, அதற்குத் தோழிகள் ‘உனக்கென்று ஒரு தனிவழியுண்டோ? எங்கள் வழியிலேதான் நீ வந்து தீரவேண்டும் என்ன; அதற்குத்தலைவி சொல்லுகிறாள்; திருவல்லவாழ்நகரிலே பரமவைதிகர்கள் கானம் செய்கிற ஸாமவேதத்தின் ஒலியும் அங்குற்ற ஹோமதூமங்களின் பரிமளமும் என்னை அவ்வழியே இழுப்பது கண்டிகோளே; அத்தகலத்துப் பெருமானுடைய திருவடிகளையே அநவரதமும் கண்டுகொண்டிருக்க வேணுமென்னுங் காதலையுடைய எனக்கு அந்தக் காதல் நிறைவேற வழி சொள்ளவல்லிகோளாகில் சொல்லுங்கோள் என்றாளாயிற்று.

English Translation

O Flower-coiffured Sakhis! Woe is me, I have become thin. The Lord resides in cool Tiruvallaval amid fragrant smoke that rises from the Vedic altar, where saman chants rise like the roaring sea. Alas! when will I see his feet without interruption?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்