விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உழலை என்பில் பேய்ச்சி முலையூடு*  அவளை உயிர் உண்டான்* 
    கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட*  குருகூர்ச் சடகோபன்* 
    குழலின் மலியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
    மழலை தீர வல்லார்*  காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முலை ஊடு - முலை வழியாக
அவள் உயிரை உண்டான் - அவளது உயிரை முடித்த பெருமானுடைய
கழல்கள்  அவையே - திருவடிகளையே
சரண் ஆக கொண்ட - சரணமாகப்பற்றின
குகூர் சடகோபன் - ஆழ்வார்

விளக்க உரை

(உழலையென்பின்.) இப்பதிகம் பழூதறக் கற்கவல்லார் காமிநிகளுக்குக் காமுகர்போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு யோக்யராவர் என்று பலனுரைத்துத் தலைக்கட்டுகிறார். பூதனைமுலையுண்டு அவளை முடித்து விரோதி நிரஸாநசீலனென்று புகழ்பெற்ற கண்ணபிரானுடைய திருவடிகளையே தஞ்சமாகக் கொண்ட ஆழ்வார், திருக்குழலோசையிற் காட்டிலும் அதிசயித்ததாம்படி யருளிச்செய்த ஆயிரம் பாசுரத்தில் இப்பத்தையும் ஊற்றத்துடனே சொல்லவல்லார்களை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல்விழுந்து யோக்யராகக்கொள்வர்கள் என்றதாயிற்று. மூலத்தில் “காமர்மானேய் நோக்கியர்க்கு” என்று இவ்வளவே யிருப்பதால் மானேய் நோக்கியரான ஸ்த்ரீகளுக்கு விரும்பத்தக்கவராவர் என்று பொருள்பட வேண்டாவோவென்று சங்கித்தலாகாது * துராக்குழி தூர்த்துயனைநாளகன்றிருப்பன் * என்று நாலு பாசுரங்களுக்கு முன்னே அருளிச்செய்த பரமவிரக்தாக்ரேஸரரான ஆழ்வார் அதற்குப் பொருந்தாதபடி பலச்ருதி சொல்லார். ஆகவே, அது உவமையாகக் காட்டினதத்தனை. உவமைக்கு வாசகமான சொல் இல்லையேயென்று கேட்கவேண்டா; தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே என்றதுகாண்க. தாமரைபோன்ற திருவடிகளைச் சொல்ல வேண்டுமிடத்துத் தாமரையென்றே சொன்னது போலவாம். அன்றியே, திருநாட்டிலுள்ள அப்ஸரஸ்ஸுக்களால் விரும்பி ஆதரிக்கப் பெறுவர்கள் என்றுமாம். இது எளிதான பொருளென்று பதவுரையில் காட்டப்பட்டது.

English Translation

This decad of the thousand songs, sweeter than flute melody, is sung by kurugur Satakopan who found refuge at the feet of Krishna, -who drank the ogress's breasts and dried her life to the bones. Those who can sing it flawlessly will be adored by fawn-eyed dames.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்