விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
    உன்னால் அல்லால் யாவராலும்*  ஒன்றும் குறை வேண்டேன்* 
    கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!*  அடியேன் அரு வாழ்நாள்* 
    செல் நாள் எந் நாள்? அந்நாள்*  உன தாள் பிடித்தே செலக்காணே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நான் என் செய்கேன் - அடியேன் என்ன செய்வேன்!
களைகண் யாரே - ரக்ஷகராவார் யாவர்!
என்னை என் செய்கின்றாய் - என்னை என்ன செய்வதாக இருக்கிறாய்?
உன்னால் அல்லால் -உன்னைத் தவிர்த்து
யாவராலும் - வேறு ஒருவிதமான உபாயத்தாலும்

விளக்க உரை

(என்னால் செய்கேள்.) இப்படி துடித்துக் கூப்பிட்ட விடத்திலும் குளிர நோக்குதல் குசலப்ரச்னம் பண்ணுதல் ஒன்றும் செய்யாமையாலே, ‘நாம் பேற்றுக்கு ஏதேனும் உபாயம் அனுட்டிக்கவேணும் என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருக்கிறான்போலும்’ என்று கொண்டு ‘பிரானே! நான் என் காரியம் செய்கையென்று ஒன்றுண்டோ? நீயேசென்று தலைக்கட்டித் தரவேணும்’ என்கிறார். முதலடியில் மூன்றுவகையான கேள்விகள் அடங்கியிருக்கின்றன; என் தலையிலே ஏதேனும் காரியம் ஏறிடுவதாக எண்ணியிருக்கிறாயோ? பிறரை ரக்ஷகராகத் தேடியோடும்படி செய்ய நினைத்திருக்கிறாயோ? நீயே செய்வதாக நினைத்திருக்கிறாயோ? என்று கேள்விகள். உன் திருவடிகளைப் பெறுகைக்கு என்னால் செய்யலாவ தில்லாமையாலே என் தலையிலே ஒன்று ஏறிடவேண்டா; நீ உன்னைத் தரப்பார்த்தாயோ? உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயோ? “என்னான் செய்தேன்” என்பதனால் ‘நான் என்ன செய்வது?’ என்று கேட்கிறால்லர்; என்னாலே ஒன்றும் செய்ய முடியாதே என்று கையை விரித்துச் சொல்லுகிறபடி. ஸ்ரீவசனபூஷணத்தில் “என்னான் செய்கேனென்கிற விடத்திலே இம்மூன்றுமுண்டு” என்ற ஸ்ரீஸூக்தி இங்கே அநுஸந்தேயம். அவ்விடத்து மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்; - “எம்பெருமான் தம்முடைய ஆர்த்திகண்டு இரங்கக் - காணாமையாலே தன்னைப் பெறுமிடத்தில் சில ஸாதநாநுஷ்டானம் பண்ணவேணுமென்று இருந்தானாகக்கொண்டு உபாயாந்தரானுஷ்டானத்துக்கு யோக்யதையில்லாதபடி அஜ்ஞானான நான் என்செய்வேன்? ஜ்ஞானம் தந்தோமே யென்னில், நீதந்த ஜ்ஞானத்தாலே ஸ்வரூப பாரதந்த்ரியத்தை யுணர்ந்து ஸாதநாநுஷ்டானம் அப்ராப்தம் என்றிருக்கிற நான் என் செய்கேன்? ஸ்வரூபத்துக்குச் சேராதாகிலும் உன்னைப் பெறலாமாகில் அது தன்னையனுஷ்டிக்கலாமிறேஜ்ஞானமாத்ரத்தைத் தந்தாயாகில்; பக்தி ரூபாபந்நஜ்ஞானத்தைத் தருகையாலே ஒன்றையும் அடைவுபட அநுஷ்டிக்க க்ஷமனமல்லாதபடி பக்தி பரவசனான நான் என் செய்கேன் என்று இம்மூன்றும் ஆழ்வார்க்கு விவக்ஷிதம்”

English Translation

What can I do? What are you doing to me? Who else can protect me? O Lord reclining in Kudandai surrounded by stone walls, I seek no redress with anyone save you; pray see that I lead the remaining days of my life holding on to your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்